

அவசர மீட்புதவிப் பணியில், நிலநடுக்கத்துக்குப் பிந்தைய இடங்களின் நிலைமை மிகவும் சிக்கலானது. அன்றாட பயிற்சியில் முன்கூட்டியே எதிர்பாராத அபாயகரமான நிலைமைகள் லியூ சியாங் யாங்கை சோதித்தன. மே 13ஆம் நாள் இரவு, வென் சுவான் மாவட்டத்தின் ஹான் வாங் நகரிலுள்ள துங் பாங் நீராவி எந்திர நிறுவனத்திலான மீட்புதவிப் பணியில், மறுபடியும் இடிந்து விழக் கூடிய அச்சுறுத்தல், லியூ சியாங் யாங் புதிதாக உருவாக்கிய ஒரு மீட்புதவி முறையினால் சமாளிக்கப்பட்டது. இந்த முறை சீன நிலநடுக்க நிர்வாகப் பணியகத்தின் நிபுணர் யின் குவாங் ஹுய்யின் பாராட்டைப் பெற்றது.
1 2 3 4
|