• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-15 12:52:28    
Shenzhou-7விண்வெளி பயணம் - பகுதி I

cri

2008 ஆம் ஆண்டு முழுவதும் உலக நாடுகளின் பார்வை சீனா மீது தான் பதிந்திருக்கிறது என்று நிச்சயமாக சொல்லலாம். ஜனவரி திங்களில், கடந்த 50 ஆண்டுகளில் நிகழாத கடுமையான பனி மழை பொழிவால் சீனா அல்லலுற்றது. மே 12 ஆம் தேதி ரிக்டர் அளவு கோலில் எட்டாக பதிவான சிச்சுவான் வென்சுவான் நிலநடுக்கம் சீன மக்களை சொல்லமுடியாத துயரில் ஆழ்த்தியது. ஆனால் இவ்வளவு சோதனைகளின் நடுவிலும் ஆகஸ்ட் 8 ஆம் நாள் தொடங்கிய உலகமே ஆவலோடு எதிர்பாத்திருந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வலராறு காணாத அளவுக்கு அருமையாக நடந்தேறியது. சர்வதேச நாடுகள் அனைத்தும் வியப்படையும் அளவுக்கு பிரமாண்டமான அளவில் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களை சீனா நடத்தி அமர்களப்படுத்தியது. 51 தங்கங்கள் பெற்று தங்கப்பதக்க வரிசையில் சீனா முதல் இடம் பிடித்து அசத்தியது. செப்டம்பர் 6 ஆம் நாள் தொடங்கிய பாராலிம்பிக் போட்டிகளிலும் 89 தங்கங்கள் உள்பட 211 பதக்கங்கள் பெற்று தங்க மற்றும் பதக்க வரிசையில் சீனா முதலிடம் வகித்து பெருமை பெற்றது.
1 2 3 4