• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-15 12:52:28    
Shenzhou-7விண்வெளி பயணம் - பகுதி I

cri

இந்த மூன்று விண்வெளி வீரர்களோடு Shenzhou-7 விண்கலம் வடமேற்கு சீனாவிலுள்ள ஜியு சுவான் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்து சரியாக இரவு 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. திட்டப்படி Long March II-F ஏவுகலனிலிருந்து ஏவப்பட்ட 583 வது நிமிடத்தில் பூமியிலிருந்து 343 கிலோமீட்டர் உயரத்திலான சுற்றுவட்டப்பாதையில் அது பறந்தது. 27 ஆம் நாள் பிற்பகல் 4 மணி 39 வது நிமிடம், விண்வெளி வீரர்களுக்குரிய ஆடை அணிந்த Zhai zhigang, Liu boming இருவரும், விண்கலத்தின் பக்கவாட்டு வாயிலை திறந்தனர். Zhai zhigang விண்வெளியில் சுமார் 20 நிமிடங்கள் நடந்தார். விண்வெளியில் நடந்த சீனர்களின் அடையாளமாக செஞ்சீன நாட்டின் 5 நட்சத்திரங்கள் கொண்ட சிவப்பு நிறக்கொடியை Zhai zhigang வெற்றிகரமாக அசைத்தபோது அதனை உடனடி ஒளிபரப்பு காட்சியாக பார்த்து கொண்டிருந்த சீனர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். பெருமிதம் கொண்டனர். விண்வெளி ஆராய்சியில் தாய்நாட்டின் வளர்ச்சியை போற்றினர். அவருக்கு உதவியாக Liu boming விண்கல வாயிலில் இருந்து கொண்டே உதவி செய்தார். Jing Haipeng விண்கலத்தின் உள்ளே இருந்தவாறு பணிபுரிந்து கொண்டிருந்தார். விண்கலத்தின் வெளியே பொருத்தப்பட வேண்டிய மூன்று கிலோ எடையுடைய பரிசோதனை சாதனத்தை பெற்றுக்கொண்ட Zhai zhigang அதனை பொருத்தினார். விண்வெளியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடத்தல் நடவடிக்கைக்காக மட்டுமே 30 அவசர திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தன. Zhai zhigang விண்வெளியில் நடந்த பின்னர் சீன அரசுத்தலைவர் ஹூசிந்தாவ் பெய்ஜிங் விண்வெளி பயண கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார். சீன விண்வெளிப் பயண வரலாற்றிக்கு அவர்கள் பெரும் பங்காற்றியதற்கு அவர் வாழ்த்துக்கள் தெரிவித்தார். விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டு, பூமிக்கும் திரும்பும் விண்கலப்பகுதி உள்மங்கோலிய பகுதியில் 28 ஆம் நாள் தரையிறங்கியது. அதிலிருந்து விண்வெளி வீரர்கள் மூவரும் வெளியே வந்தனர்.


1 2 3 4