• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-15 12:52:28    
Shenzhou-7விண்வெளி பயணம் - பகுதி I

cri

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சீனாவின் முதல் முயற்சி 2003 ஆம் ஆண்டு தான் தொடங்கியது. அக்டோபர் 15 ஆம் நாள் விண்வெளி வீரர் Yang Liwei Shenzhou-5 விண்கலத்தில் விண்வெளியில் 21 மணிநேரம் பறந்தார். 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று Shenzhou-6 விண்கலம் இரண்டு விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு விண்வெளியில் பறந்தது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் மூன்றாவது முயற்சி தான் செம்டம்பர் 25 ஆம் நாள் அனுப்பப்ட்ட Shenzhou-7 விண்கலம். அதில் Zhai Zhigang, Liu Boming மற்றும் Jing Haipeng என்ற மூன்று வீரர்கள் விண்வெளியில் பறந்தனர். இவர்கள் மூவரும் 1966 ஆம் ஆண்டு பிறந்தவர்கள். Heilongjiang மாநிலத்தை சேர்ந்த Zhai Zhigang, Longjiang வட்டத்தையும், Liu Boming Yi'an வட்டத்தையும் சேர்ந்தவர்களாவர். Jing Haipeng Shanxi மாநிலம் Yuncheng நகரை சேர்ந்தவர். 1985 ஆம் ஆண்டு சீன மக்கள் விடுதலைப் படையின் விமான படையில் சேர்ந்த இவர்கள், சிறந்த விமான ஓட்டிகளாக திகழ்ந்து சீன விண்வெளி வீரர்களின் முதல் குழுவில் 1998 ஆண்டு ஜனவரியில் சேர்ந்தனர். Shenzhou-5 விண்கலப் பயணத்தின் இறுதிக் குழுவில் Zhai Zhigang இடம் பெற்றிருந்தார். இவர்கள் மூவரும் Shenzhou-6 விண்வெளிப்பயணத்திற்கு பயற்சி பெற்ற ஆறு விண்வெளி வீரர்களில் இடம் பெற்றிருந்ததது குறிப்பிடதக்கது.

1 2 3 4