• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-15 12:41:49    
உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்துள்ள சீனா

cri

2001ம் ஆண்டின் நவம்பர் திங்கள் 10ம் நாள், கத்தார் உள்ளூர் நேரப்படி, மாலை 6 மணி 40 நிமிடம், கத்தார் நிதி, பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் யூசுப் கமலின் அறிவிப்போடு, உலக வர்த்தக அமைப்பில் சீனா அதிகாரப்பூர்வமாக சேர்ந்தது. 15 ஆண்டுகால பேச்சுவார்த்தை மற்றும் காத்திருப்பதற்கு பின், உலக வர்த்தக அமைப்பின் 143வது உறுப்பு நாடாக சீனா மாறியது. இது, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைப்படுத்தப்பட்ட பின், சீனப் பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையில் பெறப்பட்ட மிக முக்கிய சாதனைகளில் ஒன்றாகும். உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த 7 ஆண்டுகளில், நேர்மையான, பயன் தரும் மனப்பான்மையோடு சீனா தன் வாக்குறுதியை நனவாக்கியுள்ளது.

வெளிநாட்டுத் திறப்பு என்பது 2001ம் ஆண்டு, சீனா உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த போது ஒப்புக்கொண்ட உடன்படிக்கை முதற்குறிப்பின் முக்கிய அம்சமாகும். முதலில், உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்ததற்கு பிந்தைய சில ஆண்டுகளில், சரக்கு வர்த்தகத் துறையிலான சுங்க வரியை சீனா பன்முங்களிலும் குறைத்தது. உடன்படிக்கையின்படி இறக்குமதிக்கு பங்கீடு விதிப்பது உள்ளிட்ட சுங்க வரியற்ற நடவடிக்கைகளை சீனா நீக்கியது. உலக வர்த்தக அமைப்புக்கான விதிகளின் படி, பெரிய வணிகப் பொருட்களுக்கான இறக்குமதி சுங்க வரியின் பங்கீட்டு நிர்வாக அமைப்புமுறையை சீனா சீர்ப்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகளை, உலக வர்த்தக அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த அமைப்பின் செயலக வளர்ச்சிப் பிரிவின் தலைவர் ஃபலையட்ஸ் கூறியதாவது:  

பொருளாதாரத்தில் ஏற்றுமதி முக்கிய இடம் பெறும் நாடான சீனா, வேளாண்மை மற்றும் வேளாண்மையற்ற துறைகளில் வரியை குறைக்கும் பணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை பெற்றுள்ளது. வேளாண் துறையின் சராசரியான சுங்க வரி, 9.8 விழுக்காடாக குறைந்தது. வேளாண்மையற்ற துறையின் சராசரி சுங்க வரி 8 விழுக்காட்டுக்கு குறைந்தது. வரியை குறைக்கும் இந்த நடவடிக்கைகள், தொடர்புடைய துறைகளின் வர்த்தகத் தொகைக்கு பெரிய அதிகரிப்பைக் கொண்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

1 2 3 4