
சீனாவின் முக்கிய மூன்று வணிக வங்கிகள், வெளிநாட்டு பங்குச் சந்தையில் நுழைந்துள்ளன. Qirui, jili, zhongxing, huawei உள்ளிட்ட சீன அரசு சாரா தொழில் நிறுவனங்களின், வெளிநாடுகளிலான அலுவல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்ததற்கு பின், சீன தொழில் நிறுவனங்கள் இந்த சாதனைகளைப் பெற்றுள்ளன. சீனச் சேவைத் துறை, உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பெரியளவில் வளர்ச்சியடைந்துள்ளது என்று உலக வர்த்தக அமைப்பில் சேர்வது பற்றிய பேச்சுவார்த்தைக்கான தலைமை பிரதிநிதியும், boao என்னும் ஆசிய கருத்தரங்கின் தலைமைச் செயலாளருமான longyongtu தெரிவித்தார்.
2003ம் ஆண்டு முதல், ஆசியா, ஓஷியா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட 29 நாடுகள் மற்றும் பிரதேசங்களுடன் சேர்ந்து, 12 தாராள வர்த்தக மண்டலங்களை சீனா உருவாக்கியுள்ளது. உலக வர்த்தக நடவடிக்கையில், ஒரு முக்கிய ஆற்றலாக சீனா மாறியுள்ளது என்று சீன துணை வணிக அமைச்சர் yixiaozhun தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது:
உலக பொருளாதார அதிகரிப்புக்கு பங்காற்றுவதோடு, அமைதி வளர்ச்சிப் பாதையில் சீனா நடைபோட்டு வருகின்றது. இணக்க உலக கட்டுமானத்தை முன்னேற்றி, தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் சர்வதேச வர்த்தக விதியை வகுப்பதிலும் சீனா ஆக்கப்பூர்வமாக கலந்துகொள்கின்றது. உலகளவில், தாராள வர்த்தக முன்னேற்றப் போக்கை விரைவுபடுத்தி, வளரும் நாடுகளின் நலனைப் பேணிகாத்து, பல தரப்பு வர்த்தக அமைப்புமுறையின் முக்கிய ஆற்றலாக மாற சீனா பாடுபடும் என்று அவர் கூறினார். 1 2 3 4
|