
சரக்கு வர்த்தகத்தை விட, நிதி, தொலைத்தொடர்பு போன்ற சேவை வர்த்தகத் துறையின் வெளிநாட்டுத் திறப்பு, சீனாவின் தொடர்புடைய தொழில் துறைகளில் மேலும் ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, நிதித் துறையில், வெளிநாடுகளின் முதலீட்டு வங்கிகள், சீனாவில் மக்களுக்கு ரென்மிபி சேவையை வழங்கலாம். வெளிநாடுகளின் முதலீட்டு காப்புறுதி நிறுவனங்கள், சீனாவின் எந்த நகரங்களிலும் கிளை நிறுவனங்களை உருவாக்க அனுமதிக்கப்படுகின்றன. தொலைத் தொடர்புத் துறையில், வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள், கூட்டு முதலீட்டு தொழில் நிறுவனத்தை உருவாக்கும் வழிமுறை மூலம், சீனாவில் அடிப்படை தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபடலாம். 4 வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் அனுமதி பெற்று, தொலைத்தொடர்புச் சேவைச் சந்தையில் நுழைந்துள்ளன. சில்லறை விற்பனைத் துறையில், உலக முன்னணி பன்னாட்டு நிறுவனங்களான, வால் மார்ட், கேரேஃபோர் முதலியவை சீனச் சந்தையில் நுழைந்ததோடு, வெகுவாக வளர்ந்தும் வருகின்றன. தவிர, வெளிநாட்டு வழக்கறிஞர் மற்றும் கணக்கர் அலுவலகம், கூட்டு முதலீட்டு மற்றும் ஒத்துழைப்பு மருத்துவ சிகிச்சை, கல்வி, சுற்றுலா ஆகியவை, சீன சந்தையில் காணப்படுகின்றன.
1 2 3 4
|