சேவை வங்கல் தொழில் நிறுவனங்களைத் தேர்தெடுக்கும் போது, சீன மக்கள் மேலதிகமான வாய்ப்புகளையும், தெரிவுகளையும் பெறுவது என்பது சந்தை திறப்பின் பொருளாகும். அதேவேளையில், சீன தொழில் நிறுவனங்கள் போட்டி நிர்ப்பந்தத்தை எதிர்நோக்குகின்றன. ஆனால், உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்தது. சீன தொழில் நிறுவனங்களுக்கு கொண்டு வருகின்ற அறைகூவலை விட, மேலதிக பயன்களை கொண்டுள்ளது என்று சீன தொழில் முனைவோரில் பொரும்பாலானோர் கருதுகின்றனர். சீனாவின் மிகப் பெரிய வணிக வங்கியான சீன தொழில் மற்றும் வணிக வங்கியின் தலைமை இயக்குநர் jiangjianqing கூறியதாவது:
முதலாவதாக, போட்டி, சீன வங்கித் துறையின் வளர்ச்சியின் மிகப் பெரிய உந்து ஆற்றலாக விளங்குகிறது. போட்டி மூலம், சீன வணிக வங்கியின் கண்ணோட்டம் மாறியுள்ளது. எனவே, சீன வணிக வங்கியின் சீர்திருத்தம் முன்னேற்றமடைந்துள்ளது. இரண்டாவதாக, போட்டியுடன், சீன வணிக வங்கிகள், சர்வதேச நிதிச் சந்தையில் நுழைந்து, சர்வதேச வங்கிகளுடன் சேர்ந்து, சர்வதேச நடைமுறையிலான வரையறையின்படி மதிப்பிடப்படுகின்றன என்று அவர் கூறினார்.
1 2 3 4
|