 அண்மையில், Feng yun 3 எனும் புதிய தலைமுறையின் முதலாவது வானிலை செயற்கைக் கோள் ஒன்றை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சீனா மற்றும் இதர நாடுகளுக்கு மேலும் தரமான வானிலை சேவையை இது வழங்கும்.
மே திங்கள் 27ம் நாள், சீன tai yuan செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து இது விண்ணில் ஏவப்பட்டது. வடிவமைப்பின் கோரிக்கைக்கிணங்க, இது பூமியின் நெடுங்கோடு திசையைப் பின்பற்றி, 102 நிமிட நேரத்தில், பூமியின் தெற்கிலிருந்து வடக்கு துருவ பாதையில் சுற்றி ஒரு முறை பறக்கும். முந்தைய அதே ரக வானிலை செயற்கைக் கோள்களுடன் ஒப்பிட்டால், Feng yun 3இன் திறனும் நம்பகத் தன்மையும் பெரிதும் உயர்ந்துள்ளன என்று சீனத்தேசிய செயற்கைக் கோள் வாநிலை மையத்தின் தலைவர் யாங் ஜுன் கூறினார். அவர் கூறியதாவது
முந்தைய செயற்கைக் கோள்கள் ஒளிப்படம் மட்டும் எடுக்கும். படம் மூலம் வெளியாகும் தகவல் மட்டும் கிடைத்தது. எடுத்துக்காட்டாக, அந்தப் படம் மூலம் புயல் காற்றின் உள்ளடக்க கட்டமைப்பைக் காண முடியாது. தற்போது, Feng yun 3 எனும் வானிலை செயற்கைக் கோள் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டது. ஆகையால், சீனாவின் வாநிலை முன்னறிவிப்பை மேம்படுத்துவதற்கும், அதன் தவறின்மை விகிதத்தை உயர்த்துவதற்கும் இது சிறந்த பயன் அளிக்கும் என்றார் அவர்.
1 2 3 4
|