• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-17 12:01:30    
சீனாவின் புதிய தலைமுறை வானிலை செயற்கைக்க் கோள்

cri

1970ஆம் ஆண்டுகளின் முதல் வானிலை செயற்கைக் கோள்களை சீனா ஆராய்ந்து தயாரிக்கத் துவங்கியது. இதுவரை, 9 செயற்கைக் கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. உலகில் துருவ சுற்றுவட்டப் பாதை மற்றும் அசையாத வானிலை செயற்கைக் கோள்களைக் கொண்ட மிக சில நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். சுற்றுவட்டப்பாதைகளில் இயங்குவதன் அடிப்படையின் வடிவத்தின் படி, துருவ சுற்றுவட்டப் பாதை வானிலை செயற்கைக் கோள் எனவும், அசையாத செயற்கைக் கோள் எனவும் 2 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவ்விரண்டும் ஒத்துழைத்து இயங்கினால், வானிலை கண்காணிப்பு நிலைமை பெரிதும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. சீனத்தேசிய செயற்கைக் கோள் வாநிலை மையத்தின் நிபுணர் துங் சௌ குவா அம்மையார் இது பற்றி விளக்கம் கூறியதாவது

துருவ சுற்றுவட்டப் பாதை வானிலை செயற்கைக் கோள் பூமியின் தெற்கு மற்றும் வடக்கு துருவப்படி, அதாவது நெடுங்கோடு திசையாக சுற்றி செல்கின்றது. முழு உலகையும் ஆய்வு செய்வது அதன் சிறப்பாகும். விண்வெளியில் இது ஒரு நடமாடும் கண்காணிப்பு நிலையமாக செயல்படுகின்றது. அசையாத வானிலை செயற்கைக் கோள் குறிப்பிட்ட இடத்தில் அமைந்து, பூமியின் நான்கில் ஒரு பகுதி அல்லது மூன்றில் ஒரு பகுதி மண்டலத்தைக் கண்காணிக்கின்றது என்றார் அவர்.

Feng yun 3, துருவ சுற்றுவட்டப் பாதை வானிலை செயற்கைக் கோளாகும். சுற்றுவட்டப் பாதையில் இயங்கும் இதர அசையாத வாநிலை செயற்கைக் கோள்களுடன் இணைந்து, இது சீனா மற்றும் உலகின் வாநிலை நிலைமையைக் கண்காணிக்கின்றது.

கண்காணிப்பு மற்றும் பரிசோதனை தரத்தை உயர்த்தும் வகையில், Feng yun 3 செயற்கைக் கோளில், விண்வெளி சுற்றுச் சூழல் கண்காணிப்பு கருவி, நுண்ணலை படக் கருவி உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட சர்வதேச முன்னேறிய தொழில் நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்று மேற்கூறிய மையத்தின் தலைவர் யாங் ஜுன் எடுத்து கூறினார். அவற்றின் மூலம், Feng yun 3 வானிலை செயற்கைக் கோள் பகலும் இரவும் பூமியை முழுமையாக ஆய்வு மேற்கொள்வதுடன் எதிர் வரும் 10 முதல் 15 நாட்கள் வரையான வானிலை முன்னறிவிப்பை வழங்கலாம். அதன் தவறின்மை விகிதமும் உயர்வாக உள்ளது.

1 2 3 4