• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-17 12:01:30    
சீனாவின் புதிய தலைமுறை வானிலை செயற்கைக்க் கோள்

cri

முன்பு, சீனாவின் வானிலை செயற்கைக் கோள்கள் ஒரு வாரத்துக்குட்பட்ட வானிலை முன்னறிவிப்புகளை மட்டுமே வழங்கியது. சில வேளையில், தவறுகள் ஏற்படக்கூடும் என்று யாங் ஜுன் கூறினார்.

வானிலை முன்னறிவிப்பின் தவறின்மை விகிதத்தை உயர்த்துவதைத் தவிர, வானிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர வானிலை சம்பவங்களை சீனா பயன் தரும் முறையில் சமாளிப்பதற்கு இந்தச் செயற்கைக் கோள் உதவி அளித்து, பேரிடர் தடுப்பு மற்றும் நீக்கத் துறையில் முக்கிய பங்கு ஆற்றும். உலக வெப்பமேறலின் பின்னணியி்ல், புயல், மணல் காற்று போன்ற தீவிர வானிலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. Feng yun 3 செயற்கை கோள் தொடர்புடைய தரவுகளை உடனடியாக பூமிக்கு அனுப்பி, அரசு வாரியங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்குத் துணை புரியும் என்று யாங் ஜுன் கூறினார். அவர் கூறியதாவது,

உள் நாட்டில் 4 நிலையங்கள் feng yun 3 செயற்கைக் கோள் அனுப்புகின்ற தரவுகளை பெறலாம். மேலும், வடக்கு துருவத்தில், ஸ்வீடனுடன் ஒத்துழைத்து கட்டியமைத்த ஒரு நிலையமும் இத்தரவுகளைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத்தரவுகள் சீனத்தேசிய செயற்கைக் கோள் வானிலை மையத்துக்கு அனுப்பப்படும். நாம் இந்த தரவுகளைக் கையாண்டு பல்வகை வானிலை அறிக்கைகளை உருவாக்கி பல்வேறு வாரியங்களுக்கு விநியோகிக்கின்றோம் என்றார் அவர்.

Feng yun 3 செயற்கைக் கோள் தரும் தகவல்களை பன்னாடுகளும் பகிர்ந்து பயன்பபடுத்தும். எதிர்காலத்தில், மிகப்பல சர்வதேச பயன்பாட்டாளர்கள்ர் சீன Feng yun 3 செயற்கைக் கோள் வழங்கும் தரவுகளை நேரடியாக பெற்று பயன்படுத்தலாம் என்று நிபுணர் துங் சௌ குவா அம்மையார் தெரிவித்தார். அவர் கூறியதாவது

வானிலை செயற்கைக் கோள் பொது மக்களுக்குச் சேவை புரிகின்றது. இது விண்வெளியே கண்காணித்து பகுதாராய்வதுடன் பூமிக்கு தரவுகளை அனுப்புகின்றது. இத் தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி இருந்தால், இந்த தரவுகளைப் பயன்படுத்தலாம். ஆகையால், இது சர்வதேச பயன்பாட்டுச் செயற்கைக் கோளாகும் என்றார் அவர்.

1 2 3 4