
na dianfuஇன் வீடு, yin chuan நகரிலுள்ள தங்க மிகச் சிறப்பான இடத்தில் அமைந்துள்ளது. அதை சுற்றியுள்ள சூழல், மிக அழகாக இருக்கிறது. வீட்டின் முற்றத்தில் பல மலர்ச்செடிகளும், புற்களும் காணப்படுகின்றன. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் உள்ளடக்கமாக, உள்ளூர் அரசு, சிறுபான்மை தேசிய இனங்களின் புத்தாக்கம் பற்றிய சலுகைகளை வெளியிட்டது. எடுத்துக்காட்டாக, சிறுதொகை கடன், வரியைக் குறைப்பது அல்லது விலக்குவது முதலிய சலுகைகளை வழங்கியது. கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகளின் துவக்கத்தில், அவர் தனது மகனுடன் சேர்ந்து நகரத்துக்குச் சென்று பணிபுரியத் தொடங்கினார். கட்டிட நிர்மானத் தொழிலாளராக பணிபுரியத் தொடங்கி, அனுபவங்களையும் நிதியையும் திரட்டிய பிறகு, na dianfu சொந்தமாக தொழிலாளர்களை அமர்த்தி, ஒப்பந்தப் பணிகளுக்குப் பொறுப்பேற்கின்றார். செல்வச் செழிப்பு பெற்ற பிறகு, அவர், வாடகை கார் கூட்டு நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார். அவர் கூறியதாவது
சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணிக்கு முன், போதிய பணம் இல்லை. அதற்குப் பிறகு, நானும் என் மகனும், வெளியூருக்குச் சென்று ஒப்பந்தப் பணியாளராக பணிபுரிந்தோம். படிப்படியாக வளர்ந்து, தற்போது ஆண்டு வருமானம், நல்ல வாய்புள்ள காலத்தில், சுமார் 5 இலட்சம் யுவானும். சாதாரண காலத்தில், ஒன்று அல்லது இரண்டு இலட்சம் யுவானும் பெறுகிறோம் என்றார் அவர்.
1 2 3 4
|