• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-22 21:29:54    
சீன கிராமப் பொருளாதாரத்தின் வளர்ச்சி

cri

சீனா, ஒரு வேளாண்மை வல்லரசு ஆகும். சீனாவின் விவசாய மக்கள் தொகை, 70 கோடியைத் தாண்டியது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த கடந்த 30 ஆண்டுகளில், சீன அரசு, கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக பல உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், விவசாயிகளின் ஊக்கத்தையும் புத்தாக்கத்தையும் தட்டி எழுப்பி, உழைப்புப் பயன் விகிதத்தை உயர்த்தி, கிராமப்புறப் பொருளாதாரத்தை சீனா நாளுக்கு நாள் வலுப்படுத்தியுள்ளது.

1978ம் ஆண்டுக்கு முன், சீனாவில் விளை நிலங்கள் ஒருமைபாடாக நிர்வகிக்கப்பட்டன. விவசாயிகள் அனைவருக்கும் சமமான நலன்கள் வழங்கப்பட்டன. இந்த உற்பத்தி வழிமுறை, விவசாயிகளின் உற்சாகத்தை கடுமையாக கட்டுப்படுத்தி, உற்பத்தி நலன் விகிதத்தை குறைத்தது. கிராமப்புறங்களின் பின்தாங்கிய நிலைமை நீண்டகாலமாக மேம்படாமல் தேங்கிக் கிடந்தது.

சீன மத்திய பகுதியிலான ஆன் ஹூய் மாநிலத்தின் xiao gang cun என்ற கிராமத்தின் விவசாயிகள், கூட்டண்மை விளை நிலங்களை சொந்தமாக பயிரிட்டு, சொந்த உழைப்பு அளவின்படி வருமானம் பெற முடிவெடுத்தனர். 1978ம் ஆண்டின் டிசம்பர் திங்கள் முதல் நடைபெற்ற சீர்திருத்தம், முழுச் சீனாவிலும் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியைத் துவக்கியது.

இத்தகைய முறைமைமை நடைமுறைப்படுத்துவது, விவசாயிகளுக்கு சுய நிர்ணய உரிமையை வழங்கி, சிறிய ரக உற்பத்தியின் மேம்பாட்டை அதிகரித்து, உற்பத்திக்கு முக்கிய பங்காற்றியது. வேளாண் உற்பத்தியிலான விவயாயக் குடும்ப உடன்படிக்கை பொறுப்பு முறை, நடைமுறைக்கு வந்த முதல் ஆண்டில், மொத்த தானிய விளைச்சல், 66 ஆயிரம் கிலோகிராமை எட்டியது. இது, முந்தைய 10 ஆண்டுகளின் சராசரி விளைச்சலுடன் ஒப்பிடுகையில் 4 மடங்காகும்.

1980ம் ஆண்டின் செப்டம்பர் திங்களில், சீன அரசு அதிகாரப்பூர்வமாக இந்த வழிமுறைக்கு ஒப்புதல் அளித்தது. அதற்குப் பின் இம்முறைமை சீனாவின் கிராமப்புறங்களில் பரவலாகியது. 1978ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை, சீனாவின் வேளாண் விளைச்சலின் சராசரி ஆண்டு அதிகரிப்பு, சுமார் 8 விழுக்காட்டை எட்டியது. முழு நாட்டில் பரவிய இந்த சீர்திருத்தத்தினால், 90 கோடி விவசாயிகள் சொந்த முயற்சியின் மூலம் உணவு மற்றும் உடைப் பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டனர். 2007ம் ஆண்டு சீனாவின் மொத்த தானிய விளைச்சல், 50 கோடி டன்னைத் தாண்டியது. உலகில் 7 விழுக்காடான விளை நிலம், உலகில் 22 விழுக்காடான மக்களின் தேவைக்கு பொறுப்பேற்பது என்பது ஒரு அற்புதமாகும்.

1 2 3 4