
நிலத்தை திரட்டி, பெருமளவில் நிர்வகிப்பதன் மூலம், நிலத்தின் பயன் அதிகரிக்கும் என்று ஆன்ஹூய் மாநிலத்தின் வேளாண் கமிட்டி துணைத் தலைவர் xuwei கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது,
இதன் மூலம், தொழில் நுட்பத் திறமைசாலிகளுக்கும், சந்தை உணர்வுடைய விவசாயிகளுக்கும் நிலம் வழங்கப்படும் என்றார் அவர்.
சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புத் கொள்கை நடைமுறைக்கு வந்த 30 ஆண்டுகளில், கிராமப்புற தொழில் நிறுவனங்களை நிறுவுவது, விவசாயிகள் நகரங்களில் பணி புரிவதற்கு ஊக்கமளிப்பது முதலிய கொள்கைகளை சீன அரசு நிறைவேற்றுவதன் மூலம், விவசாயிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினையைத் தீர்த்து, கிராமப்புறப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை விரைவுப்படுத்தியது. சீன கிராமப்புறங்களில் வறுமையில் வாழும் ஏழைவர்களின் மக்கள் தொகை 30 ஆண்டுகளுக்கு முந்தைய 25 கோடியிலிருந்து தற்போதைய 1 கோடியே 30 இலட்சமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு சீன விவசாயிகளின் நபர்வாரி வருமானம், 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 31 மடங்கு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானம், நுகர்வை அதிகரித்து சீனப் பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்தும் முக்கிய சக்தியாக மாறியுள்ளது. 1 2 3 4
|