• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-22 21:29:54    
சீன கிராமப் பொருளாதாரத்தின் வளர்ச்சி

cri

கிராமப்புற பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றும் வகையில், 8 ஆண்டுகளுக்கு முன், சீன அரசு கிராமப்புற வரி வசூலிப்பில் சீர்திருத்தத்தை மேற்கொண்டது. 2006ம் ஆண்டுக்குள், வேளாண் வரி வசூலிப்பு முற்றிலும் நீக்கப்பட்டது. சீனாவில் 2600 ஆண்டுகளில் நடைமுறையிலுள்ள வேளாண் வரி வசூலிப்பு வரலாறு முடிவடைந்தது. இது, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 13000 கோடி யுவான் மதிப்புள்ள சுமையை நீக்கியது. சீன அறிவியல் கழகத்தின் வேளாண் கொள்கை ஆய்வு மையத்தின் ஆய்வாளர் zhang xiu அம்மையார் கூறியதாவது,

கடந்த நூற்றாண்டின் 50ம் ஆண்டுகளில், வேளாண் வரி, பல்வேறு இடங்களின் நிதியில் பெரிய பகுதியை வகித்தது. பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன், அதன் பங்கு குறைந்து வருகிறது. இவ்வரியை நீக்கி, விவசாயிகளின் சுமையை குறைத்த அதே வேளையில், கிராமப்புறங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவது உறுதி என்றார் அவர்.

விவசாயிகளின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளில், பயிர் செய்கை, இயந்திரங்களை வாங்குவது முதலியவற்றில் சீன அரசு விவசாயிகளுக்கு நேரடி மானியம் வழங்க தொடங்கியது. 2007ம் ஆண்டு வரை, விவசாயிகளுக்கு சீன அரசு வழங்கிய மொத்த மானியத் தொகை 6000 கோடி யுவானை எட்டியது.

1 2 3 4