 இத்திங்களின் 7,8 நாட்களில், சீனாவில் இவ்வாண்டுக்கான உயர் கல்விக்கான தேசிய நிலை தேர்வு நடைபெற்றது. அனைவரும் அறிந்த படி, கடந்த திங்கள் சி ச்சிவான் மாநிலத்தின் வென் சுவானில் கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. தற்போது, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நில அதிர்வுகள் இன்னும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
புள்ளிவிபரங்களின் படி, சிச்சுவான், கான் சு ஆகிய கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த 57 மாவட்டங்களில் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மேனிலைப் பள்ளி பட்டதாரிகள் இவ்வாண்டுக்கான உயர் கல்விக்கான தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். ஆனால், நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், அவர்கள் நாட்டின் இதர பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் ஒரு கோடி மாணவர்களுடன் ஒரே நேரத்தில் தேர்வில் கலந்து கொள்ள முடியாத நிலை. மாணவர்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் வகையில், மேற்கூறிய மாணவர்களின் தேர்வை ஒரு திங்களுக்கு ஒத்தி போடுவதாக உள்ளூர் அரசு கவனமாக ஆராய்ந்து சீனக் கல்வி அமைச்சின் அனுமதியைப் பெற்று, முடிவு மேற்கொண்டது. குறிப்பிட்ட இந்தக் காலத்தில், தொடர்புடைய வாரியங்கள் பள்ளி வசதி, தேர்வு இடங்கள் ஆகியவற்றைப் புனரமைக்கலாம். மாணவர்களும் தனது மனநிலையைச் சரிப்படுத்தலாம்.
1 2 3 4
|