
சி ச்சுவான், கான் சு ஆகிய கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களைத் தவிர, இதர பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உயர் கல்விக்கான தேர்வு திட்டப்படி நடைபெற்றது என்று தெரிய வருகின்றது. இதற்காக, நடுவண் நிதியமைச்சகம் 5 கோடியே 30 இலட்சம் யுவானை ஒதுக்கியுள்ளது. துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் புனரமைப்பு, உயர் கல்விக்கான தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு தேவைப்பட்ட கல்வி மற்றும் தேர்வு வசதிகளை வழங்குவது ஆகியவற்றில் இத்தொகை பயன்படுத்தப்படுகின்றது. உள்ளூர் கல்வி வாரியங்களும் பல்வேறு வழி முறைகள் மூலம் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு உதவி அளித்துள்ளன. சில பிரதேசங்களில், மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். சில பிரதேசங்களில், மாணவர்கள் தற்காலிக வீடுகளில் கல்வியைத் தொடர்கின்றனர். மேலும் சிறப்புத் தொழில் பணியாளர்கள் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை சேவை வழங்குகின்றனர்.
எடுத்துக்காட்டாக, ஷான் சி மாநிலத்தின் lue yang மாவட்டத்தில், மாணவர்கள் திட்டப்படி தேர்வில் கலந்து கொள்வதை உத்தரவாதம் செய்ய, தொடர்புடைய வாரியங்கள் முக்கியமாக தேர்வு இடங்களைச் செப்பனிட்டுள்ளன. உள்ளூர் கல்வி வாரியத்தின் அதிகாரி zhang zhen min கூறியதாவது
Lue yang 2வது நடுநிலை பள்ளியிலும், dong guan துவக்கப் பள்ளியிலும் மொத்தம் 2200 சதுர மீட்டர் பரப்பிலான இடங்களில் 42 தேர்வு அறைகளை ஏற்பாடு செய்துள்ளோம். தற்காலிக வீடுகள் கட்டியமைக்கப்பட்ட பின், அவற்றில் எமது மாவட்டத்தின் சுமார் 1100 மாணவர்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கலந்து கொள்ள முடியும் என்றார் அவர்.
1 2 3 4
|