• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-23 21:58:04    
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி

cri

இது மட்டுமல்ல, சீனக் கல்வி அமைச்சகமும், மாணவர்களைச் சேர்க்கும் வழிமுறைகளைச் சரிப்படுத்தியது. தொடர்புடைய கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சி ச்சுவான் மாணவர்களைச் சேர்க்கும் எண்ணிக்கையை திட்டத்தில் வகுக்கப்பட்டதை விட 2 வி்ழுக்காடு அதிகரிக்க வேண்டும் என்று கோரப்பட்டன. தவிர, பேரிடர் நீக்கப்பணியில் சிறந்த பணி மேற்கொண்ட மாணவர்களும் சிறப்பு அனுமதி வழங்கப்படுவர்.

கடந்த சில நாட்களில், நாட்டின் சுமார் 1400 கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் பாதிக்கப்பட்ட சி ச்சுவான் மாணவர்களுக்கான அன்பு காட்டும் திட்டங்களை வெளியிட்டு வருகின்றன. பெய்ஜிங், ஷாங்காய், குவாங் துங் ஆகிய இடங்களின் பல்கலைக்கழகங்கள் பொருளாதார இன்னலுக்குள்ளாகிய பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்களுக்கு பல்வகை நிதி உதவிகளை வழங்குவதென தீர்மானித்துள்ளன. பெய்சிங் அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழக வேந்தர் திரு xu jin wu கூறியதாவது

இன்னலுக்குளாகிய பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மாணவர்களுக்கு 3 வாக்குறுதிகளை வழங்குகின்றோம். எமது பல்கலைக்கழகத்தில் அவர்கள், கல்விக் கட்டணம், வாழ்க்கை கட்டணம், போக்குவரத்து கட்டணம் ஆகியவை செலுத்தத் தேவையில்லை என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட பிரதேசத்து மாணவர்களின் நடைமுறை இன்னல்களைக் கருத்தில் கொண்டு, தேர்வின் நியாய தன்மையை உண்மையாக பாதுகாக்க வேண்டும் என்று சீனக்கல்வி அமைச்சின் தொடர்புடைய தலைவர்கள் அண்மையில் மீண்டும் கோரியுள்ளனர்.


1 2 3 4