
வென் சுவான் மாவட்டம், தேர்வு ஒத்தி போட்டப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாகும். உள்ளூரின் ஒரு நடுநிலை பள்ளியில் கல்வி கட்டிடம் நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 800க்கும் அதிகமான மேனிலைப் பள்ளி பட்டதாரிகள், சதுக்கத்தில் கட்டியமைக்கப்பட்ட கூடாரங்களில் கல்வி பயின்று கொண்டிருக்கின்னர். மாணவர் tian yang song கூறியதாவது
நிலநடுக்கத்துக்குப் பின், ஆசிரியர்கள் ஆக்கப்பூர்வமாக எங்களை அணிதிரட்டி கல்விக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விரைவில் நாங்கள் கட்டியமைக்கப்படும் தற்காலிக வீடுகளில் வசிக்கலாம். அதேவேளையில், கல்வியைத் தொடர்ந்து பெறலாம். இது குறித்து நாங்கள் மனநிறைவு அடைகின்றோம் என்றார் அவர்.
தற்போதைய கல்வி நிலைமை கடுமையாக இருந்த போதிலும் இயன்ற அனைத்தையும் பயன்படுத்தி, நடைபெறவுள்ள தேர்வில் சிறந்த சாதனை பெறப் பாடுபடுவேன் என்று மாணவி gao si yuan கூறினார்.
1 2 3 4
|