கலை......கண்டிப்பாக. கைத்தறித் துறை சீனாவின் யுன் நான், சான்சி ஸச்சான் போன்ற மாநிலங்களிலும் சிங்கியான் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்திலும் பரவியுள்ளது. பல்வகை விலங்குகளின் வடிவத்தில் சான்சி மாநில பெண்கள் சிறு சிறு துண்டு துணிகளை கொண்டு தலையணை வடிவத்தில் புலி பொம்மை பொருட்களை தைக்கிறார்கள். சான்சி மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்கின்ற வெளிநாட்டினர் இந்த துணியிலான புலிகளை மிக ஆர்வத்துடன் வாங்குகின்றார்கள். சில சமயங்களில் சிலர் 10க்கு கூடுதலான துணியாலான புலி பொம்மைகளை கூட வாங்குகிறார்கள்.
தமிழன்பன்........பகளாயூர் பி.ஏ.நாச்சிமுத்து அவர்கள் சீனாவில் சுற்றும் பயணம் செய்த போது சான்சி மாநிலத்தின் சீ ஆன் நகரில் பயணம் செய்தார். அப்போது அவர் துணியாலான புலி பொம்மைகளை வாங்கினார் என்று கேட்டறிந்தேன்.
கலை.....ஆமாம். நீங்கள் அறிந்தது உண்மைதான். மேலும், யுன் நான் மாநிலத்தில் வாழ்கின்ற பெண்கள் பெரிய மற்றும் சிறிய தொங்கும் துணி பைகளை தைத்து விற்பனை செய்கிறார்கள். அவர்கள் தைத்த பல வண்ண துணி பைகள் சீனாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் புகழ் பெற்றவை. மக்கள் அனைவரும் யுன் நான் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்யும் போது இத்தகைய பல வண்ண துணிப் பைகளை வாங்குவது வழக்கம்.
1 2 3 4
|