தமிழன்பன்........சிங்கியான் உய் கூர் தன்னாட்சி பிரதேசத்தில் வாழ்கின்ற சிறுபான்மை தேசிய இன மக்கள் வண்ண பட்டு துணியால் தயாரிக்கின்ற தலை அல்லது கழுத்தில் போடும் துணி மிக அருமையானது. தரமும் சிறப்பானது. கலை நீங்கள் சிங்கியானில் சுற்றுப் பயணம் செய்த போது இத்தகைய கழுத்தில் சுற்றப்படும் பட்டு துணிகளை வாங்கினீர்களா.
கலை.......ஆமாம். வாங்கினேன். அவைகளை அன்பளிப்பாக நண்பர்களுக்கு வழங்கினேன்.
தமிழன்பன்.......கைத்தறி துறை சீனாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தனிச்சிறப்புடன் இடம் பெறுகின்றது.
கலை.....உங்கள் கருத்துக்கு நான் உடன்படுகின்றேன். கைத்தறி துறை சிறியதாக இருந்தாலும் மக்களின் வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிங்கியான் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தில் உய்கூர் இன பெண்கள் இந்த கைத்தறி துறை மூலம் வண்ணத்திலான தலை மற்றும் கழுத்து பட்டுத் துணிகளை தைத்து நல்ல வருமானம் பெறுகிறார்கள். யுன் நான் மாநிலத்தில் வாழ்கின்ற பெண்கள் கைத்தறி நெசவு துறை மூலம் பல வண்ண துணி பைகளை தைத்து சுற்றுலா விற்பனை பொருளாக வியாபாரம் செய்து நல்ல வருமானம் பெறுகிறார்கள்.
1 2 3 4
|