• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-30 09:26:05    
புல்வெளியில் இன்பமான வாழ்க்கை

cri

சென் ச்சென் மாணவர்களைப் பொருத்த வரை, கல்வி பரிமாற்றத்தைத் தவிர, மங்கோலிய இன மாணவர்களுடன் பழகி, அவர்களது குடும்பத்தினருடன் ஒன்று கலந்தது, புல்வெளி வாழ்க்கையின் முக்கிய ஒரு பகுதியாகும். மாணவி The hui tuyaa மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் நவீனமயமாக்க நகரில் வசித்திருந்த போதிலும், பல மங்கோலிய இனப் பழக்கவழக்கங்களை தொடர்கின்றது. எடுத்துக்காட்டாக, மங்கோலிய மொழி பேசுவது, பால் கலந்த தேனீரைக் குடிப்பது, நீள் ராகம் எனும் மங்கோலிய இனத்தின் பழைய பாடல்களைப் பாடுவது, தனது இனத்தின் புகழ்பெற்ற வரலாற்று பிரமுகரான Ghinggis Khanக்கு வழிபாடு செய்வது முதலியவை அவற்றில் அடங்கும். அழைப்பின் பேரில், தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் The hui tuyaa வீட்டுக்கு வந்து, விரைவில், அவரது குடும்பத்தினர்களுடன் நண்பர்களாகினர்.

The hui tuyaaவின் தந்தை விருந்தினர்களுக்கு Ghinggis Khanஇன் கதையைப் படித்துக் காட்டினார். கதைகள் மூலம், மங்கோலிய இனம், குதிரை முதுகுகளிலான தேசிய இனமாகும் என்ற அற்புதத்தை வெளிநாட்டு மாணவர்கள் அறிந்து கொண்டனர். மேலும், அவர்கள் The hui tuyaaஇன் தந்தையிடமிருந்து மங்கோலிய மொழில் வரவேற்பு என்ற சொல்லைக் கற்றுக்கொண்டனர். எவரை சந்தித்தாலும், அவர்கள் சைபைனு என்று மகிழ்ச்சியுடன் சொல்லி வரவேற்பு தெரிவித்தனர்.

அந்த வெளிநாட்டு மாணவர்களுடன் நண்பர்களாகியதற்கு The hui tuyaaவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் கூறியதாவது

அவர்கள் சிறந்த மனம் கொண்டவர்கள். பால் கலந்த தேனீர், ஹாதா முதலிய மங்கோலிய இனத்தின் தனிச்சிறப்புப் பொருட்கள் அளித்து அவர்களை சிறப்பாக உபசரித்தோம். உள் மங்கோலிய தனிச்சிறப்பு மிக்க அன்பளிப்புப் பொருட்களை அவர்களுக்கு வழங்கினோம். மங்கோலிய இனத்தின் வெளிப்படையான தங்கு தடையின்றி பழகும் குணத்தை அவர்களின் நினைவில் வைக்க வேண்டும் என்று விரும்புவதாக அவர் கூறினார்.

1 2 3 4