
hong qi கிராமத்தில் மக்கள் செல்வ செழிப்புடன் வாழ்கின்றனர். hong qi கிராம மக்கள் நாளுக்குநாள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள், சொந்த வாழ்க்கையின் இடமான தாயகங்களை கவனத்துடன் வளர்க்கின்றனர். மரங்களை நட்டு மலர்களை பயிரிடுவது, அவர்களின் விருப்பமாக மாறியுள்ளது. Li zhuhao கூறியதாவது
இங்கு, சுமார் 20 வகைகளின் மரங்கள் உள்ளன. அவற்றில் சைபிரஸ் அழும் வில்லோ மரம், wutong,silver chain, பிர்ச் முதலியவை இடம்பெறுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும், தோட்டமும் பழ மரங்களும் உள்ளன. wutong மரம்,சிறப்பாகவும் அழகாகவும் இருக்கின்றது. hong qi கிராமத்திலுள்ள பரந்த சதுக்கத்தில் உயர்ந்த ஊஞ்சல் ஒன்று உள்ளது. பயணிகள் பலர் ஊஞ்சல் ஆடி மகிழ்கின்றனர். Wan bao நகர அரசின் பணியாளர் meng fanmei கூறியதாவது
ஊஞ்சல், கொரிய இனத்தின் சிறப்பான விளையாட்டாகும். ஆண்டுதோறும் வசந்தகாலத்தில் ஊஞ்சல் ஆட்டல் போட்டி நடைபெறுகிறது. hong qi கிராமத்துக்கு வந்த பயணிகள், தனிச்சிறப்பு வாய்ந்த கொரிய இன விளையாட்டுகளில் கலந்து கொள்வது மட்டுமல்ல, கொரிய இனத்தின் பாரம்பரிய உணவான da gao தயாரிப்பில் நேரிடையாக ஈடுபடுகின்றனர். Li zhuhao கூறியதாவது
பயணிகள், கிராமப்புற வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கின்றனர். பிறகு, அவர்கள், da gao சிற்றுண்டியை வாங்கி, சாப்பிடுகின்றனர். da gao சிற்றுண்டி, கொரிய இனத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த உணவாகும்.
1 2 3 4
|