
உணவுப் பொருட்களின் தரம் பெரிதும் உயர்ந்த போதிலும், பலர் அறிவியல் ரீதியான உணவுக் கருத்துக்களை உருவாக்கவில்லை. சம நிலையிலான உணவுப் பொருட்களின் முக்கியத்துவம் பற்றி உணரவில்லை. ஒரு செய்தி ஊடகத்தில் பணி புரியும் திரு சோ கூறியதாவது
நான் இறைச்சி வகைகளைச் சாப்பிட விரும்புகின்றேன். காலையில், சுண்டல் போன்ற எண்ணெயில் வறுக்கப்பட்டப் பொருட்களைச் சாப்பிடுகின்றேன். ஒப்பீட்டளவில், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைக் குறைவாகச் சாப்பிடுகின்றேன். சமநிலையில் உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும் என்றும், இப்படி செய்தால், உடலுக்கு நல்லது என்றும் கேட்டு அறிந்தேன். ஆனால், காய்கறிகளை விரும்பாத நான் எப்படி செய்ய வேண்டும் என்றார் அவர்.
சீன சுகாதார வாரியங்களின் புள்ளிவிபரங்களின் படி, உணவு வகைகளின் காரணத்தால் ஏற்பட்ட தீரான நோய்வாய்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. தற்போது, சீனாவில் 16 கோடி மக்கள் உயர் இரத்த அழுத்தம் நோய்வாய்பட்டனர். 16 கோடி மக்களின் இரத்தத்தில் கொழுப்பு அளவு வரையறையைத்தாண்டியுள்ளது. சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2 கோடியை எட்டியுள்ளது. இது குறித்து, சீன நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் ஆய்வாளர் யாங் சியோ குவாங் கூறியதாவது
ஊட்ட சத்துக்கள் நல வாழ்வின் அடிப்படையாகும். சீன மக்களின் ஊட்ட சத்து நிலைமை, இரட்டை அறைக்கூவல்களை எதிர்நோக்குகின்றது. கடந்த சில ஆண்டுகளாக, உணவு வகைகளின் மேம்பாட்டுடன், ஊட்ட சத்து குறைவு நிலைமை குறைவாகி வருகின்றது. அதேவேளையில், உணவுப் பொருட்களின் கட்டமைப்பின் மாற்றத்தால், உடல் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை இரத்த கொழுப்பு அளவு அதிகம் முதலிய நோய் நிலைமை தெளிவாக அதிகரித்து வருகின்றது. சீன மக்களின் உடல் நலத்தைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினை இது மாறியுள்ளது என்றார் அவர்.
1 2 3 4
|