• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-06 15:26:24    
உணவு வகைகளின் கட்டமைப்பு

cri

சீன மக்களின் உணவுப் பொருட்கள் நிலை பற்றி குறிப்பிடுகையில், பெரும்பாலோரின் உணவுப் பொருள் கட்டமைப்பு நியாயமற்றது என்று யாங் சியௌ குவாங் சுட்டிக்காட்டினார். அவர் கூறியதாவது,

நாம் நுண்ணிய சத்துக்களை குறிப்பாக காலசியம், வைட்டமின் ஏ முதலியவற்றைப் போதிய அளவில் உட்கொள்ள வில்லை. தவிர, உப்பு, சமையல் எண்ணெய் முதலியவற்றைக் கூடுதலாக உட்கொள்கின்றோம். பெரிய நகரங்களில் மக்கள், அதிக கொழுப்பு சத்துகளையும், குறைவான தானிய உணவு வகைகளை உட்கொள்கின்றனர். பால், சோயா அவரை முதலியவற்றை போதிய அளவில் உட்கொள்ளவில்லை. பெய்ஜிங், ஷாங்காய் முதலிய பெரிய நகரங்களில் மக்கள் அதிக பால்களைக் குடிக்கின்றனர். ஆனால், ஆண்டுக்கு ஒருவருக்கு 80 கிலோகிராம் பால் குடிக்கின்றார். இதற்கும் உலகில் சராசரி நிலைமைக்கும் இடையில் இன்னும் பெரிய இடைவெளி நிலவுகின்றது என்றார் அவர்.

சீன சுகாதார அமைச்சு, 2007ம் ஆண்டு, திருத்தப்பட்ட சீன மக்களுக்கான உணவுப் பொருட்கள் பற்றிய வழிக்காட்டக் குறிப்புகளை வெளியிட்டது. நலவாழ்வுக்கான உணவுப் பொருட்களை உட்கொள்வது பற்றி இதில் 10 முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

தானிய உணவு வகைகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நாள்தோறும் 50 கிராம் முதல் 100 கிராம் வரையான தானிய உணவு வகைகளை உட்கொள்ள வேண்டு்ம் என்றும் நிபுணர்கள் முன்மொழிந்தனர். வைட்டமின், கனிப் பொருள், உணவு fiber முதலிய ஊட்டச் சத்துகளின் இழப்பைத் தவிர்க்கும் வகையில், அரிசி, கோதுமை ஆகியவற்றைக் கூடுதலாக மாவாக்கக் கூடாது என்றார் அவர்கள்.

நாள்தோறும் பச்சை காய்கறி மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். யாங் சியௌ குவாங் கூறியதாவது

நாள்தோறும் 300 கிராம் முதல் 500 கிராம் வரையான காய்கறிகளையும், 200 கிராம் முதல் 400 கிராம் வரையான பழங்களையும் உட்கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகளையும் பழங்களையும் உட்கொள்வது நல்லது. இவ்விரண்டும் தனி மேம்பாட்டுடையவை. ஆனால், ஒன்றுக்கு ஒன்று பதிலளிக்க முடியாது. இருளான நிறைமுடைய காய்கறி வகைக்கு, உடலுக்கு நன்மை பயக்கும் தாவர வேதியியல் பொருட்கள் அதிகம் என்று கருதுகின்றோம் என்றார் அவர்.

1 2 3 4