• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Monday    Apr 7th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-09 09:34:51    
மேய் லி பனிமலை சுற்றுலா

cri

57 வயதுடைய திபெத் முதியவர் Tuodenima, அவரது மனைவியுடன், மிங் யொங் பனிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தை ச்சி கோயிலுக்கு அருகில், சிற்றுண்டி உணவகம் நடத்தி வருகிறார். Tuodenima, வெண்ணெய் தேனீர், பார்லி, பலகாரம் முதலிய திபெத் இனபாணி மிக்க உணவுப் பொருட்களை விற்று வருகிறார். அவரது மனைவி, உணவகத்திற்கு வருகின்ற விருந்தினரை உபசரிக்கின்றார். இவ்வாண்டின் தேசிய விழாவை கொண்டாடிய தங்க வாரத்தில், நாள்தோறும், 120க்கு மேலான பயணிகள் அவரது சிற்றுண்டி உணவகத்தில் உபசரிக்கப்பட்டனர். அக்டோபர் திங்கள், அவர்களின் வருமானம், சுமார் 5 ஆயிரம் யுவானாகும் என்று Tuodenima அறிமுகப்படுத்தினார். இதைத் தவிர, அவர், மலையடிவாரத்தில், திபெத் இனபாணி வாய்ந்த விடுதியையும் நடத்தி வருகிறார். சுற்றுலாத் துறை வளர்க்கப்படும் முன், கிராமங்களிலுள்ள ஆண்கள், வெளியுர்களுக்கு, வீடுகள் கட்டுமானப் பணி புரிந்து சென்றனர். அப்போது, நாள்தோறும் பத்து யுவானுக்கு குறைவான வருமானத்தை மட்டுமே பெற்றனர். இங்கு சுற்றுலா வளர்ந்த பின், எமது வருமானம் மிகவும் உயர்ந்துள்ளது. தற்போது, எனது குடும்ப உறுப்பினர் 7 பேரும், சுற்றுலாவை மையமாக கொண்டு தொழில் நடத்துகிறோம். எமது ஆண்டு வருமானம் 40 ஆயிரம் யுவானை எட்டியுள்ளது என்று Tuodenima கூறினார். அவர் கூறியதாவது,

சுற்றுலாத் துறை வளர்ந்த பின், எமது கிராமத்திலிருந்து வெளியூர்களுக்கு சென்று, யாரும் பணி புரியவில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும், தொலைக்காட்சிப் பெட்டி, குளிர் சாதனப் பெட்டி, மின் சமையல் கருவிகள் போன்ற அடிப்படை வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பு, நிலத்தை உழுவதற்கு, யார்க் எருமைகளைப் பயன்படுத்தினோம். தற்போது, நாம், இழுவை வண்டிகளை பயன்படுத்துகின்றோம் என்றார் அவர்.

1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040