தற்போதைய மிங் யொங் கிராமம், 10 ஆண்டுகளுக்கு முந்தியதை விட, பெரிதும் மாறியுள்ளது. உபசரிப்பு வசதிகள் உள்பட, இங்கு வருகின்ற பயணிகளுக்கு அதிகமான வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த மாற்றங்கள் பற்றிக் குறிப்பிட்ட போது, 10 ஆண்டுகளுக்கு மேல் சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபட்டுள்ள திரு He Zhijian கூறியதாவது,
1990ம் ஆண்டில் சுற்றுலா, வழிகாட்டியாக, நான் முதல் முறையாக தே ச்சிங் வந்தேன். அப்போது, இங்குள்ள சுற்றுலாத் துறை, உபசரிப்பு வசதிகள், இயற்கைக் காட்சிகளில் வளர்ச்சி முதலியவை பின்தங்கிய நிலையில் இருந்தன. ஆனால், இப்போது, பெரிதும் மாறியுள்ளது. தங்குமிட வசதி, உணவகம், மற்றும் சுற்றுலா இடங்களில் கட்டுமானம் என எல்லா வசதிகளும் மிகவும் முழுமையாக சீராகியுள்ளன என்றார் அவர்.
Kawagebo மேய் லி பனிமலையின் முக்கிய சிகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 6740 மீட்டர் உயரமே இருந்த போதிலும், இதன் சிகரத்தின் உச்சியை வெற்றிகரமாக எட்டியவர் எவருமில்லை. அதன் கீழ் பகுதி, பனியால் மூடப்பட்டுள்ளது. இப்பனிக்கட்டிகளில், மிங் யொங் பனிக்கட்டி, மிகவும் கம்பீரமானது. அதன் நீளம், 8 கிலோமீட்டராகும். இதன் அகலம் 500 மீட்டருக்கு மேலாகும். அதன் பரப்பளவு, 73.5 சதுர கிலோமீட்டராகும். அது, உலகில் மிக அழகான பனிமலையாகும் என்று அமெரிக்காவின் தேசிய நிலவியல் எனும் இதழ் பாராட்டியது.
1 2 3 4
|