• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-09 09:34:51    
மேய் லி பனிமலை சுற்றுலா

cri

இச்சிகரம், திபெத்திலுள்ள பௌத்த மதத்தின் எட்டு மத மலைகளில் முதலிடம் வகிக்கிறது. அது, மனதிலுள்ள பாதுகாப்பு கடவுளாக திபெத் இனத்தவர்களால், கருதப்படுகிறது.

முதல் முறையாக இங்கு வந்த அமெரிக்க பயணிகளில் Back மற்றும் அவரது மனைவி Carl, மேகத்தால் சூழப்பட்ட மேய் லி பனிமலையாலும், மிக உயர்ந்த பனிக்கட்டியாலும் ஈர்க்கப்படுகின்றனர். பாரம்பரிய உள்ளூர் திபெத் இன பண்பாட்டையும், திபெத் இனத்தவர்களின் விருந்தோம்பலையும் அவர்கள் அனுபவித்தனர்.

இவர்களைப் போன்ற, ஆயிர கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் ஆண்டுதோறும், மேய் லி பனிமலையில், பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உள்நாட்டுப் பயணிகள், எண்ணற்ற முறையில், இங்கே சுற்று பயணம் மேற்கொள்கின்றனர். கடந்த ஆண்டில் மட்டும், மிங் யோங் பனிக்கட்டிக் காட்சிப் பிரதேசத்தின் நுழைவுச்சீட்டு வருமானம், 28 இலட்சத்து 50 ஆயிரம் யுவானை எட்டியது. இது, வரலாற்றில் மிக உயர்வாகும். சுற்றுலாத் துறை பெற்று தரும் மிக அதிகமான வருமானம், மேய் லி பனிமலையைச் சுற்றி வாழ்கின்ற திபெத் இனத்தவர்களை, வறுமையான வாழ்க்கையிலிருந்து விடுபடச் செய்துள்ளது. சுற்றுலாத் துறை, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் தொழிற்துறையாகும். 1998ம் ஆண்டில், மிங் யோங் கிராமம், முழு அம்மாவட்டத்தில் வறுமைக்கு எடுத்துக்காட்டாக விளக்கியதாகும். சுற்றுலாவை வளர்த்ததன் மூலம், 10 ஆண்டுகாலத்தில் முழு கிராமத்திலுள்ள நவர்வாரி ஆண்டு வருமானம் சுமார் எட்டு ஆயிரம் யுவானாகியது. தற்போது இக்கிராமம், எமது மாவட்டத்தில் மிக செழுமையான கிராமங்களில் ஒன்றாகும் என்று தே ச்சிங் மாவட்டத்தின் சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் A Deng அறிமுகப்படுத்தினார்.


1 2 3 4