
உணவும், உணவுத்தயாரிப்பும் ஒரு பண்பாட்டின் முக்கிய அம்சமாக விளங்குவதை யாரும் மறுக்க இயலாது. கையில் சாப்பிடுவது, குச்சிகளை வைத்தும், கரண்டிகளை வைத்தும் சாப்பிடுவது என சாப்பிடும் வழிமுறை தொடங்கி, உண்ணும் உணவு, பருகும் பானம் என எல்லாமே ஒரு சமூகத்தின், பண்பாட்டின் தனித்தன்மையை உணர்த்தக்கூடியவை.
அந்த வகையில் சீனப் பண்பாட்டில் மட்டுமன்றி அதன் வரலாற்றின் ஏடுகளிலும் பதிவான சில சமையல் கலைஞர்களை பற்றி சில தகவல்களை கடந்த வாரம் அறியத் தந்தோம். நளபாகம் தொடர்கிறது.

சீனாவில், சுங் வம்சக்காலத்தில் பெண் சமையல் கலைஞர்கள் மிகப் புகழ் பெற்று விளங்கினார்களாம். ச்சூ நியாங் (Chu Niang) என்று அறியப்பட்ட இந்த பெண் சமையல் கலைஞர்கள், அவ்வமயம் ஆண் சமையல் கலைஞர்களை விட அதிகமான கட்டணம் பெற்றார்கள் என்று அறியப்படுகிறது. அரசக் குடும்பம், செல்வந்தர்கள், அறிஞர் பெருமக்கள் என முக்கிய நபர்களுக்கும், குடும்பங்களுக்கும், இந்த பெண் சமையல் கலைஞர்களே முதல் தெரிவாக இருந்தனராம். ஒரு காலக்கட்டத்தில் இந்த பெண் சமையல் கலைஞர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட, பெண் சமையல் கலைஞர்களுக்கு பயிற்சியளித்து, கலையை கற்றுத்தரும் பள்ளி ஒன்றும் உருவாக்கப்பட்டதாம்.
1 2 3 4
|