
ஒரு இசைக்கோர்வையை வழிநடத்தும் நபரைப் போல, இசைக்கருவிகளையும், பாடகர்களையும் ஒருங்கே நிற்கவைத்து இசைக்கச் செய்யும் இசையமைப்பாளரைப் போல இந்த பெண் சமையல் கலைஞர்கள், பெரிய பெரிய விருந்துகளை மிக நேர்த்தியாக வழிநடத்தி, பிரமிக்கச்செய்தார்களாம். சொங் சான் நியாங் (Song San Niang) எனும் பெண் சமையல் கலைஞர், தலைமையமைச்சர் வாங் ஷெங் (Wang Zheng) அவர்களுக்கான ஆயிரம் பேர் கலந்துகொண்ட ஒரு பெரிய விருந்தை, மேசை ஒன்றில் அமர்ந்தபடி கவனித்து, நடத்தினாராம். தனது உதவியாளர்கள் என்பதுக்கும் அதிகமானோரை, மேசையில் அமர்ந்தபடியே, வண்ணத்துணிகளாலான சிறு கொடிகளை அசைத்து, செய்ய வேண்டியது என்னவென்று அவர்களுக்கு சைகை காட்டி, வேலை வாங்கினாராம் இந்த பெண் சமையல் கலைஞர். ஒரு குறிப்பிடா நிற கொடியை அசைத்தால், அதே நிறத்தில் சீருடையணிந்த அவரது குறிப்பிட்ட பணியாளர்கள், தங்களுக்கான வேலையை சீராக செய்தனர். சமையல் கலையை இப்படி மிக நேர்த்தியாக வழிநடத்திய அவர், சுவையான உணவை அளித்ததோடு, அதை சமைக்கும், பரிமாறும் வழிமுறையையும் ஒரு அரங்கேற்றம் போல் செய்துகாட்டி விருந்துக்கு வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தி, மகிழ்ச்சியூட்டினாராம். கண் அசைவில் காளையரை கட்டிப்போடும் காந்தப்பார்வை கொண்ட பெண்களுக்கு கையசைவில் வேலை வாங்குவது ஒன்றும் பெரிதல்லதானே.
1 2 3 4
|