• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-15 09:52:36    
சீனாவின் பாரம்பரிய விழாக்கள்

cri
கலை......வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். இந்நிகழ்ச்சி மூலம் உங்கள் வினாக்களுக்கு விடையளிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். அறிவிப்பாளர்கள் தமிழன்பன், தி. கலையரசி.

தமிழன்பன்....... சீனா எப்படி அதன் பாரம்பரிய விழாக்களை கொண்டாடுகிறது என்பதில் பல நண்பர்கள் இப்போது மிகவும் அக்கறை காட்டுகின்றனர். அது தொடர்பாக வினாக்களையும் எழுப்பி வருகின்றனர்.

கலை........கடந்த முறை நடைபெற்ற கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் வசந்த விழா பற்றி முக்கியமாக எடுத்து கூறினோம்.

தமிழன்பன்.......இந்த முறை சீனாவின் வசந்த நாட்காட்டியின் படி அமையும் விழாக்கள் பற்றி தொடர்ந்து எடுத்து கூறலாம். அல்லவா.

கலை........கண்டிப்பாக. முதலில் துவான் வூ விழா பற்றி விளக்கம் கூறலாம்.

தமிழன்பன்.......துவென் வூ விழா பற்றி எனக்கு கொஞ்சம் தெரிந்தது.

நாட்காட்டியின் படி துவென் வூ விழா சீன வசந்த நாட்காட்டியின் மே திங்கள் 5வது நாளாகும்.

கலை........இந்த விழா சீனாவின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாகும். ஈராயிரம் ஆண்டு வரலாறுடைய இந்த விழாவை பற்றி பல கதைகள் உள்ளன.

தமிழன்பன்.......அது பற்றி விபரமாக கூறுங்கள்.

கலை........அன்று திருமண மகள் தமது தாயின் வீட்டுக்கு திரும்ப வேண்டும். ச்சுன்குவே என்னும் தேவனின் படம் வீடுகளில் தொங்கிவிடப்படும். தேவனை வரவேற்கும் வகையில் படகு ஓட்டம் நடத்தப்படும். மூலிகைகள் வாசலின் முன் பக்கத்தில் கட்டி தொங்கிவிடப்படும். ஐந்து வகை நச்சுகளை ஒழிக்கின்ற வடை அனைவராலும் உண்ணப்படும். டிராகன் படகு ஓட்டம், மஞ்சள் மது குடிப்பது, சுங்சி என்ற உணவை உட்கொள்வது போன்ற நடவடிக்கைகள் விழாவின் போது மேற்கொள்ளப்படும்.

தமிழன்பன்.......ஈராயிரம் ஆண்டு வரலாறுடைய விழா இதுவரை பல்வேறு அம்சங்களால் இணைக்கப்பட்டு செழுமையாக்கப்பட்டுள்ளது. அதில் இடம் பெறும் டிராகன் படகு ஓட்டம் இப்போது சர்வதேச விளையாட்டுப் போட்டியாகிவிட்டது. விழா கொண்டாடும் போது சுங்சி என்ற ஒரு வகை உணவு பொருள் பற்றி குறிப்பிட்டீர்கள். அது என்ன மாதிரியான உணவு பொருள்?

கலை........அது ரப்பர் அரிசியை மூங்கில் இலையில் பொதிந்து சமைக்கப்பட்ட உணவு பொருளாகும். விழா நாள் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பே சீனாவின் சிற்றுண்டி கடைகளில் சுங்சி உணவு விற்பனை செய்யப்படும். அது இனிப்பானது. இறைச்சியை கலந்து சமைக்கப்பட்ட வகைகளையும் வாங்கி உண்ணலாம்.

தமிழன்பன்.......நீங்கள் சமைத்த சுங்சி உணவு வகைகளை தமிழ்ப் பிரிவின் பணியாளர்கள் எல்லோரும் விழா நாளன்று உண்டு சுவைத்தோம். அப்போது மகிழ்ச்சியடைந்தோம். அது மிகவும் சுவையாய் இருந்தது.

கலை........நீங்கள் சொல்வதை கேட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

1 2 3 4