கலை........சிங் மின் பண்டிகையை அடுத்து, வசந்த நாட்காட்டியின் படி ஆகஸ்ட் திங்கள் 15ம் நாள் சுங்சியூ விழாவாகும். அதாவது நிலா விழா கொண்டாடபப்டுகிறது.
தமிழன்பன்.......நிலா விழா என்றால் ஆங்கிலத்தில் மூன் கேக் விழா என்று அழைக்கபடுகின்றது.
கலை........அன்றிரவு நிலா வட்டமாக காணப்படுகின்றது. ஒவ்வொரு குடும்பமும் நிலா கேக், மஞ்சள் மது சிற்றுண்டி ஆகியவற்றை உட்கொண்டு விழாவை கொண்டாடுகின்றனர்.
தமிழன்பன்.......எனக்கு தெரியும். நிலா விழா நாள் வரும் முன்னரே கடைகளில் பல்வகை மூன் வடைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கலை........விழா கழிந்த பின் நிலா கேக் வகைகள் சில்லறை விற்பனையாக மாறும். விலையும் குறையும்.
தமிழன்பன்.......ஆகவே குறைந்த விலையில் நல்ல தரமுடைய நிலா
கேக் வகைகளை வாங்கி உண்ணலாம். விழா கொண்டாடும் போது நிலா கேக் வகைகளை வாங்கி சிற்றுண்டியாக உண்டு மகிழலாம்.
கலை........ வசந்த விழா, துவெவூ விழா, சிங் மின் பண்டிகை, நிலா விழா ஆகியவை வசந்த நாட்காட்டியில் பதிவு செய்யப்படுகின்ற விழாக்களாகும்.
1 2 3 4
|