தமிழன்பன்.......அடுத்து எந்த விழா பற்றி கூற இருக்கின்றீர்கள்.
கலை........சிங் மின் பண்டிகை சீனாவின் பாரம்பரிய விழாவாகவும் மிக முக்கியமானோரை நினைவு கூரும் விழாவாகவும் கருதப்படுகின்றது.
தமிழன்பன்.......இறந்தோரை நினைவுகூரும் விழா தானே. அது பற்றி விபரமாக கூறுங்கள்.
கலை........ சிங் மின் விழா காலமடைந்தோரை நினைவு கூரும் நாளாகும். பழங்கால பழக்கவழக்கப் படி, இறந்தோர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்கு செல்ல குடும்பத்தினர் மது பழங்கங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் போலி பணத்தை சவக்குழியின் முன்னால் வைத்து நினைவு கூர்கிறார்கள். பின்னர் அவர்கள் உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு வீடு திரும்புவார்கள்.
தமிழன்பன்.......சிங் மின் பண்டிகையை கொண்டாடும் போது இப்போது புதிய நடவடிக்கை சேர்க்கப்பட்டதாக அறிந்தேன். அப்படி சேர்க்கப்பட்டிருந்தால் அதை பற்றியும் சற்று விளக்குங்கள்.
கலை........ஆமாம். சிங் மின் பண்டிகை வரும் போது சீனாவில் வசந்த காலமாக இருக்கின்றது. செடிகள் மரங்கள் மற்றும் புற்கள் வளர்ந்து நிலப்பரப்பு பச்சைபசெலென அழகாக காட்டியளிக்கின்றது.
தமிழன்பன்.......பணி அழுத்தத்தை குறைக்கும் வகையில் இவ்விழாவின் விடுமுறை நாட்கள் கழிக்கப்படுகின்றன. குடும்பத்தினர் பலர் மரணமடைந்த குடும்பத்தினரை நினைவு கூர்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி வசந்த கால சுற்றுட் சூழல் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
1 2 3 4
|