
தமிழன்பன்.......இவற்றை தவிர, நாடளவிலான வேறு எந்த விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
கலை........வசந்த நாட்காட்டியில் சேர்க்கப்படாத சர்வதேச மகளிர் விழா, சர்வதேச உழைப்பாளர் விழாவான மே நாள், சர்வதேச குழந்தை நாள், சீன தேசிய விழா, சீன புத்தாண்டு நாள் முதலிய விழாக்கள் சீனாவில் கொண்டாடப்படுகின்றன.
தமிழன்பன்.......சர்வதேச மே நாளை கொண்டாடும் போது ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படுகின்றது. சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட தேசிய விழாவை கொண்டாடும் வகையில் 7 நாட்கள் நீடிக்கும் தங்க வார விடுமுறை கொண்டாடப்படுகின்றது.
கலை........ஆமாம். 7 நாட்கள் நீடிக்கும் தங்க வாரமாக தேசிய விழாவை கொண்டாடும் வகையில் மக்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்வார்கள்.
தமிழன்பன்.......அப்போது மக்கள் இந்த 7 நாட்கள் நீடிக்கும் தங்க வாரத்தை பயன்படுத்தி விழாவை நன்றாக கொண்டாடுகின்றார்கள். சுற்றுப் பயணம் மேற்கொள்வது, புறநகரில் நீர் தேக்கங்களுக்கு அருகிலுள்ள உணவு விடுதியில் தங்க மகிழ்வது, பூங்காக்களில் பயணம் செய்து மகிழ்வது போன்ற கொண்டாட்ட நடவடிக்கைகளை தேசிய விழாவில் கொண்டாடுகின்றார்கள்.
கலை........சரி. நிகழ்ச்சி முடிவடையும் நேரமாகிவிட்டது.
தமிழன்பன்.......நிகழ்ச்சியை கேட்டு மேலும் கூடுதலான தகவல் அறிந்து கொள்ள வேண்டுமாயின் கடிதம் மூலம் எங்களுக்கு வினா எழுதி அனுப்புங்கள்.
கலை........இத்துடன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.
தமிழன்பன்.......அடுத்த முறை மீண்டும் சந்திப்போம். வணக்கம் நேயர்களே. 1 2 3 4
|