 தேசிய அறிவியல் தொழில் நுட்ப ஆதரவு என்பது இதன் தலைப்பாகும். சீன அரசு சுமார் 3000 கோடி யுவானை இதில் முதலீடு செய்யும். சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அடுத்த சில ஆண்டுகளில் திட்டத்தின் மூலம், எரியாற்றல், மூலவளம், சுற்றுச்சூழல் முதலிய சிக்கலான பிரச்சினைகளைத் தணிவு செய்து, பொதுச் சேவை துறையிலான அறிவியல் தொழில் முட்பத் தரத்தைப் பன்முகங்களிலும் உயர்த்த வேண்டும் என்று சீன அரசு விரும்புகின்றது. சீன அரசவை உறுப்பினர் சென் சி லீ அம்மையார் கூறியதாவது
ஆதவுத் திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்துவது, பொருளாதாரக் கட்டுமானத்துக்கும் சமூக வளர்ச்சிக்கும் நேரடியாக சேவை புரியும். ஒரு தொகுதி பொது நலன் தன்மை வாய்ந்த தொழில் நுட்பங்களையும் தீர்க்கமான தொழில் நுட்பங்களையும் திட்டத்தின் மூலம் கைபற்றி, சுய அறிவிசார் சொத்துரிமை வெற்றிகளை பெற வேண்டும். சர்வதேச சந்தையில் போட்டியாற்றல் மிக்க தொழில் நிறுவனங்களை வளர்த்து, சமூக மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குத் தடை செய்யும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றார் அவர்.
தொழில் நுட்ப ஆராய்ச்சி திட்டம் என்பது தேசிய அறிவியல் தொழில் நுட்ப ஆதரவு திட்டத்தின் முன்னாள் பகுதியாகும்.
1980ஆம் ஆண்டுகள் முதல், சீனா தொழில் நுட்ப ஆராய்ச்சி திட்டம் மேற்கொள்ளத் துவங்கியது. ஒரு தொகுதி தீர்க்கமான தொழில் நுட்பங்களையும் பொது தன்மை வாய்ந்த தொழில் நுட்பங்களையும் சீனா கைபற்றியது. எடுத்துக்காட்டாக, கலப்பு நெல், மூ மலை இடுத்து திட்டப்பணி, சின் சான் அணு மின் நிலைய கட்டுமான திட்டப்பணி முதலியவை, மாபெரும் சமூக மற்றும் பொருளாதார பயன் பெற்றுள்ளன.
1 2 3 4
|