 வட கிழக்கு சீனாவின் Ji Lin மாநிலத்தின் Chang Chun புற நகரின் Fen Jin வட்டத்தில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளியில் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவர்களில் பல மாணவர்கள் வறுமையினால் பள்ளியில் கல்வி பயில முடியவில்லை. ஆனால் 2007ஆம் ஆண்டு முதல், Ji Lin மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களில் கட்டாய கல்விக் கட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணம் விலக்கப்பட்டுள்ளதால், இந்த மாணவர்கள் பள்ளிக்கு திரும்பியுள்ளனர்.

15 வயதான Zhang Yue, Fen Jin வட்டத்திலுள்ள Yi Jian கிராமத்தின் 27வது இடைநிலைப்பள்ளியில் கல்வி பயில்கின்றார். தனது குடும்பம் பற்றி அவர் கூறியதாவது:
"எனக்கு 6 வயதான போது, எனது தந்தையும், தாயும் மண முறிவு பெற்றனர். பின்னர் தாய் மட்டுமே என்னைப் பராமரித்தார். நான் பள்ளியில் கல்வி பயின்றேன். தாய் போதிய உடல் நலம் இல்லாதவர். நான், எனது குடும்பத்திற்கு ஒரு சுமையாகவே என்னை அப்போது நினைத்தேன்" என்றார், அவர்.
பின்னர், Zhang Yueவின் தாய், உள்ளூர் விவசாயி ஒருவரை மறுமணம் செய்தார். மாற்றாந்தந்தை வெளியூரில் வேலை செய்து, பணம் ஈட்டியுள்ளார். ஆனால், ZHANG yue மற்றும் அவரது தாயின் வாழ்க்கைத் தரம் மேம்படவில்லை. இதனால், கல்வியைக் கைவிட்டு, வெளியூருக்குச் சென்று வேலை செய்வதென Zhang Yue தீர்மானித்தார். அவர் பள்ளியிலிருந்து விலகினார்.
1 2 3 4
|