• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-04 18:02:32    
கிராம கட்டாயக் கல்வி கட்டத்தில் மாணவர்களின் கல்வி கட்டண விலக்கு

cri

6 திங்கள் காலத்துக்கு பின், Ji Lin மாநிலத்தில், கிராமங்களில் கட்டாய கல்விக் கட்டண விலக்குக் கொள்கை நடைமுறைக்கு வரத் துவங்கியது. இது, Yang Wanனின் குடும்பத்துக்கு பெரிதும் உதவி செய்கின்றது. இச்செய்தியைக் கேட்டப் பின் தமது மனவுணர்வு பற்றி Yang Wan கூறியதாவது:

"அப்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எனது மனதில் நம்பிக்கை ஏற்பட்டது. எனது உயர்ந்த சிந்தனை நனவாகக்கூடும். இனி, தாய் இன்பமாக வாழக்கூடும் என நினைத்தேன்" என்றார், அவர்.

27வது இடைநிலைப்பள்ளித் தலைவர் Zhang An Hui செய்தியாளரிடம் பேசுகையில், Zhang Yue மற்றும் Yang Wan போன்ற மாணவர்கள் இப்பள்ளியில் அதிகம். கல்விக் கட்டண குறைப்பு மற்றும் விலக்குக் கொள்கை, இம்மாணவர்களுக்கு நகரங்களின் மாணவர்களுக்கு இணையாக அதே கல்வி வாய்ப்பை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார். கிராமங்களில் மக்களின் கல்வி அறிவை உயர்த்துவதற்கு இது சாதகமானது என்று அவர் கருதுகின்றார். அவர் கூறியதாவது:

"சீனா, வேளாண் துறையை முக்கியமாகக் கொண்ட பெரிய நாடாகும். பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். கிராமப்புறங்களில் மக்களின் அறிவுகள், கல்வியைப் பொறுத்தே அமையும். நாட்டின் வளர்ச்சி, கிராமப்புறங்களின் வளர்ச்சியைச் சார்ந்திருக்கிறது. கிராமப்புறங்களின் வளர்ச்சி, கல்வியைச் சார்ந்திருக்கிறது. கிராமப்புறங்களின் குழந்தைகள், நியாயமான, சமமான, தரமான கல்வி பெற வேண்டும் என்று கருதுகின்றேன்" என்றார், அவர்.


1 2 3 4