• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-04 18:02:32    
கிராம கட்டாயக் கல்வி கட்டத்தில் மாணவர்களின் கல்வி கட்டண விலக்கு

cri

இறுதியாக Zhang Yue பள்ளிக்குத் திரும்பினார். Zhang Yueஉடன் இணைந்து இதே வகுப்பில் கல்வி பயிலும் Yang Wanனும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர், ஊனமுற்றோர் ஆவர். அவரது அண்ணன் வெளியூரில் கல்வி பயில்கின்றார். நீண்டகாலமாக அவரது தாத்தா அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து வருகின்றார். அவரது குடும்பத்தினர் திங்களுக்கு 700 யுவான் என்ற குறைந்த பட்ச வாழ்க்கை உத்தரவாதத் தொகையைச் சார்ந்து, வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. சிறு வயதிலிருந்தே Yang Wan, குடும்பத்தின் வேலைகளுக்குப் பொறுப்பேற்கலானார். அவர் கூறியதாவது:

"நாள்தோறும் பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய பின், வீட்டு வேலை செய்யத் தன்னால் இயன்றதனைத்தையும் செய்கின்றேன். அறுவடைக் காலத்தில், வயலில் நெல் அறுவடை செய்கின்றேன்"என்றார், அவர்.

எதிர்காலத்தில் தமது இரு குழந்தைகள் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வது என்பது, Yang Wanனின் தாயின் மிகப் பெரிய விருப்பம். வறுமையினால், குழந்தைகளின் கல்விக் கட்டணத்துக்காக, மற்றவரிடமிருந்து அவர் கடன் வாங்க வேண்டியிருந்தது. Yang Wan தனது குடும்பத்தின் சுமையாக மாற விரும்பவில்லை. தாம் பள்ளியிலிருந்து விலகி, வெளியூருக்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்று தனது தாயிடம் அவர் தெரிவித்தார். இது பற்றி கேள்விப்பட்ட பின், Yang Wanனின் சக மாணவர்கள் அவருக்கு பணத்தை வழங்கினர்.

1 2 3 4