
இது பற்றி Zhang Yueவின் வகுப்பு ஆசிரியர் Yang Shao Xing மூன்று முறை அவரது வீட்டுக்குச் சென்றார். Yang Shao Xing கூறியதாவது:
"அவரது குடும்பம் வறுமையானது. கல்வி மீதான அவரது ஆசையை நான் மறக்க முடியாது" என்றார், அவர்.
2007ஆம் ஆண்டு, சீனக் கிராமக் கல்விக் கட்டணச் சீர்திருத்தத்தில் முக்கிய சாதனை பெறப்பட்ட ஓர் ஆண்டாகும். அந்த ஆண்டு முதல், நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களில் கட்டாய கல்விக் கட்டத்தில் இடைநிலைப் பள்ளி மற்றும் துவக்கப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முற்றிலும் விலக்கப்பட்டுள்ளது. தவிர, கிராமங்களில் வறிய குடும்பங்களின் மாணவர்களுக்கு பாடநூல்கள் இலவசமாக வழங்கப்பட்டு, பள்ளியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களில் சுமார் 15 கோடி மாணவர்கள் இதன் மூலம் நலன் பெற்றுள்ளனர். இந்த நல்ல செய்தியைக் கேட்ட போது, Zhang Yueவின் குடும்பத்தில் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். Zhang Yueவின் தாய், நன்மை பயக்கும் இக்கொள்கை இவ்வளவு விரைவாக நடைமுறைக்கு வரும் என்று கற்பனை கூட செய்யவில்லை. அவர் கூறியதாவது:
"என் குழந்தை மீதான அரசின் அக்கறை மற்றும் உதவிக்கு நன்றி தெரிவிக்கின்றேன். கல்விக் கட்டணத்தை செலுத்தாமல் பள்ளியில் கல்வி பயில முடியாத மாணவர்களுக்கு இக்கொள்கை நம்பிக்கை தந்துள்ளது. அவர்கள் தங்களது படிப்பை முடித்துக் கொள்ள முடியும்" என்றார், அவர்.
1 2 3 4
|