 சி லின் மாநிலத்திலுள்ள யியன் பியன் கொரிய இனத் தன்னாட்சிச் சோ, சீனாவின் வடக்கிழக்குப் பகுதியில் உள்ளது. 1980ம் ஆண்டுகளில், இலட்ச கணக்கான பேர், இங்கிருந்த வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிந்துள்ளனர். Jin Xinglie, சி லின் மாநிலத்திலுள்ள யியன் பியன் கொரிய இனத் தன்னாட்சிச் சோவின் லோங் சிங் நகரின் Zhixin நகரின் Xinhua கிராமத்தின் கிராமவாசி ஆவார். சில நாட்களுக்கு முன், அவர் லிபியாவிலிருந்து திரும்பினார். அவரது மகள், அமெரிக்காவில் தையல் வேலையில் ஈடுபடுகின்றார். அவரது மனைவியும், மகனும், தென் கொரிய உணவகங்களில் பணி புரிகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன், Jin Xinglie ஆப்பிரிக்காவுக்குச் சென்று, வணிகம் செய்தார். ஆனால், தவறான முதலீட்டால், அவருக்கு ஒரு இலட்சம் யுவானுக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டது. அவர் நாட்டுக்குத் திரும்பி பின்னர், சோர்ந்து விடவில்லை. மீண்டும் வெளிநாடுகளுக்குச் சென்று, பணி புரிந்தார். இறுதியில், அவர் அதிக செல்வம் சம்பாதித்துள்ளார். அவரது மகளும் மகனும் வெளிநாட்டுக்குச் சென்று, பணி புரியும் வகையில், அவரால் அனுப்பப்பட்டுள்ளனர்.
1 2 3 4
|