
சீனாவின் கொரிய இனத்தவர்கள், அனைத்து நிலைமைகளுக்கும் பொருந்த வாழ்கின்றனர். வெளிநாடுகளில் அவர்கள் ஈடுபடும் பணிகளுக்கு தக்கப்படி, அவர்களது கருத்துக்களை மாற்றிக் கொள்வது, அவர்களின் வளர்ச்சிப் போக்கை முன்னேற்றியுள்ளது. 1980ம் மற்றும் 1990ம் ஆண்டுகளில், கொரிய இனத்தவர்கள் வெளிநாடுகளில் ஈடுபட்டவை, சுமை தூக்குதல் மற்றும் துப்புரவு போன்ற சில எளிதான உடல் உழைப்பு பணிகளாகும். ஆனால், இப்போது, அவர்களது பணிகள், சாவி செய்வது, தையல், சிகை அலங்காரம் என தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் பணிகளாகும். முன்பு, அவர்கள், குடும்பத்தினர் அல்லது நண்பரின் அறிமுகத்தின் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிந்தனர். ஆனால், இப்போது, பெரும்பாலோர், உள்நாட்டில் தொடர்புடைய பயிற்சிகளை மேற்கொண்டு, தொழில் நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்த பின், தாங்கள் விரும்புகின்ற வெளிநாடுகளுக்குச் சென்று, வேலை பார்க்கின்றனர். அவர்கள், தாய் மண்ணுக்கு திரும்பிய பின், செல்வ செழிப்பான வாழ்க்கையை பெறுவதோடு, தொழில் நுட்பங்களை செல்வமாக மாற்றி, பண்பாட்டு கருத்துக்களை பரிமாற்றி கொள்கின்றனர்.
1 2 3 4
|