
தற்போது, யியன் பியன் கொரிய இனத் தன்னாட்சிச் சோவின் Zhixin நகரில், பாதிக்கு மேலான கிராமவாசிகளின் குடும்பங்களில் சிலர், வெளிநாடுகளில் பணி புரிந்து வருகின்றனர். மென்மேலும் அதிகமான கிராமவாசிகள் வெளிநாடுகளில் பணி புரிந்து, அதிக செல்வங்களைச் சம்பாதித்துள்ளார். நெல், ஆப்பிள், பேரிப்பழம் ஆகியவற்றை முக்கிய விளை பயிராக ஆக்கிய கொரிய இன வட்டங்களும் நகரங்களும், அதிக, உயிராற்றல் கொண்டதாக காணப்படுகின்றன. அங்கு வாழ்கின்ற Zhao Jinze கூறியதாவது,
இங்கு மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதிகமான மக்களின் வீடுகள், புதியதாகக் கட்டியமைக்கப்பட்டன. அவை மிகவும் அழகாக இருக்கின்றன என்றார் அவர்.
கடந்த சில ஆண்டுகளாக, யியன் பியன் கொரிய இனத் தன்னாட்சிச் சோவிலிருந்து, வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிபவரின் எண்ணிக்கை, மென்மேலும் அதிகரித்து வருகிறது. தற்போது, அவர்கள், பணி புரியும் நாடுகளில், தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ் முதலிய 20க்கு மேலான நாடுகள் இடம்பெறுகின்றன. யியன் பியன் கொரிய இனத் தன்னாட்சிச் சோவில், வெளிநாடுகளுக்குச் சென்று, பணி புரிபவர்களின் எண்ணிக்கை, ஒரு இலட்சத்தை எட்டியுள்ளது. 2006ம் ஆண்டில் மட்டும், அவர்களின் வருமானம் 106 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியிருந்தது. அது, அவ்வாண்டில் முழு சோவின் நிதி வருமானத்தை விட, ஒரு மடங்கு அதிகமாகும். Zhao Jinze கூறியதாவது,
தற்போது, உங்கள் கண்களின் முன்னால் உள்ள இந்த வீட்டின் சொந்தக் காரர், முதல் முறை வெளிநாட்டிலிருந்து திரும்பிய போது, இவ்வீட்டைக் கட்டியமைத்தார். பின்னர், அவர் உணவகங்களை தொடங்கி, 6 இலட்சம் யுவான் முதலீடு செய்துள்ளார் என்றார் அவர்.
1 2 3 4
|