
Wu Xilan அம்மையார், அவர்களில் முக்கிய பிரதிநிதி ஆவார். அவர், 2007ம் ஆண்டு யான் பியன் சோவில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், தொழில் தொடங்கிய முன்மாதிரி தொழிலாளராக அவர் தேர்தெடுக்கப்பட்டார். தற்போது, அவரது கைவினை நுடுல்ஸ் உணவகம், யான் பியன் கொரிய இனத் தன்னாட்சிச் சோவின் யான் பியன் நகர், சி லின் மாநிலத்தின் தலைநகர் Chang Chun நகரில், ஹேய் லோங் சியாங் மாநிலத்தின் தலைநகர் Haebin நகர், லியாவ் நிங் மாநிலத்தின் தா லியன் நகர் முதலிய இடங்களில், 10 கிளை உணவகங்களைக் கொண்டுள்ளது. முன்பு தென் கொரியாவில் படிக்கும் அனுபவங்களைப் பற்றிக் குறிப்பட்ட போது, அவர் கூறியதாவது,
நாள்தோறும், விடியற்காலையே, நான் தங்கியிருந்த உணவகத்தின் உரிமையாளர் சூப் மற்றும் தோஃபை தானே செய்வார். உணர்வுபூர்வமாக உழைத்ததால் தான், அவருடைய தொழில் நுட்பங்களைக் கற்க முடிந்தது என்று Wu Xilan கூறினார்.
அவரது தலைமையில், அவரது நண்பர்களும் குடும்பத்தினரும், தொழில் புரிந்து, செல்வ சொழிபுடையோராக மாறியுள்ளனர். அதே வேளையில், Wu Xilan, தானியங்களைப் பதனிடுதல் தொழிற்சாலை கட்டியமைக்கத் துவங்கினார். பங்குதாரரோடு இணைந்து உற்பத்திப் பாதையில் வளரும் முயற்சிகளை மேற்கொள்ளத் தயாராக இருக்கிறார். 1 2 3 4
|