2009ம் ஆண்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசம், ஜனநாயகச் சீர்திருத்தத்தின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் சமூகப் பொருளாதாரத்தின் பன்முக வளர்ச்சியுடன், கடந்த 50 ஆண்டுகளில், திபெத்தில் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வாழ்க்கையில் தலைகீழான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
திபெத்தில், ஜனநாயகச் சீர்திருத்தத்தின் நடைமுறையாக்க போக்கில், திபெத் மக்களின் வாழ்க்கை நிலை, பெரிதும் உயர்ந்து வருகின்றது. மட்டுமல்ல, அவர்கள், பரந்த ஜனநாயக உரிமையைக் கொள்கின்றனர். 1961ம் ஆண்டு, திபெத்திலுள்ள பல்வேறு இடங்களில் பொதுத் தேர்தல் முறைமை நடைமுறைப்படத் துவங்கியது. அடிமைகள், நாட்டின் உரிமையாளராக மாறி, ஜனநாயக உரிமையை முதல்முறையில் பெற்றுள்ளனர். முந்தைய திபெத்தில் அடிமைகளாக இருந்த பலர், தன்னாட்சிப் பிரதேசத்தின் பல்வேறு நிலை தலைவர்களாக மாறியுள்ளனர்.
1 2 3 4
|