• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-13 10:12:05    
கடந்த 50 ஆண்டுகளி்ல் திபெத் மக்களின் வாழ்க்கையிலான மாபெரும் மாற்றம்

cri

தேசிய இனப் பிரதேசத் தன்னாட்சி அமைப்பு முறை, திபெத்தில் பன்முகங்களிலும் செயல்படுத்தப்பட்டதை 1965ம் ஆண்டில் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்டமை உணர்த்தியது. தேசிய இனப் பிரதேசத் தன்னாட்சி அமைப்பு முறை செயல்படுத்தப்பட்ட பின், திபெத்தில் பொருளாதாரம், பண்பாடு, சமூகம் ஆகிய துறைகளில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. தேசிய இனப் பிரதேசத் தன்னாட்சி அமைப்பு முறை, செயல்படுத்தப்படுவதால், திபெத் இனத்தை முக்கியமாகக் கொண்ட சிறுபான்மை தேசிய இனங்கள், அரசு விவகாரங்களை குறித்து விவாதித்து அதில் பங்கு கொள்ளும் உரிமைக்கு, பயனுள்ள உத்தரவாதம் கிடைத்துள்ளது. இப்போது, இப்பிரதேசத்தில் 34 ஆயிரம் பல்வேறு நிலை மக்கள் பேரவைப் பிரதிநிதிகளில் 94 விழுக்காட்டினர் திபெத் மற்றும் பிற சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதிகளாவர். திபெத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூகக் கட்டுமானம் முதலிய துறைகளில் பல்வேறு நிலை மக்கள் பேரவைப் பிரதிநிதிகள், சுமார் பத்தாயிரம் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தனர். திபெத் சமூகப் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு இந்த முன்மொழிவுகள், முக்கிய பங்காற்றியுள்ளன.

திபெத் தன்னாட்சிப் பிரதேச மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணை தலைவர் A teng கூறியதாவது

திபெத் மற்றும் இதர சிறுபான்மை தேசிய இனங்களின் மக்கள், அரசியல் அதிகாரத்தைச் செயல்படுத்தும் ஆர்வம் மிக அதிகமாக இருக்கின்றது.

1 2 3 4