
சீனாவில் விளையாடப்படுகின்ற சதுரங்க விளையாட்டு வகைகளில் Weiqi சதுரங்கம் ஒன்றாகும். Weiqi சதுரங்கம் அல்லது go சதுரங்கம் என்பது ஒரு சதுரமான பலகையில் விளையாடப்படும் சதுரங்க விளையாட்டு வகையாகும். இந்த விளையாட்டு விளையாடப்படும் பலகையில் காணப்படும் சதுரமான கட்டத்தில் 19 நேர் கோடுகளும், 19 கிடைக்கோடுகளும் உள்ளன. இந்த கோடுகள் 361 இடங்களில் சந்திக்கின்றன. அவ்விடங்களில் வைத்து விளையாடும் விதமாக 181 கறுப்பு கற்களும், 180 வெள்ளை கற்களும் இவ்விளையாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. கறுப்பு கற்களை கொண்டு ஆடுபவர் ஆட்டத்தை தொடங்குகின்றார். இருவர் மாறிமாறி ஆடி, இருதரப்பினரும் எதிர்தரப்பினரின் கற்களை வெட்டி எடுத்துக் கொண்டே ஆடும் பலகையில் அதிக இடங்களை கைபற்றி கொள்ள போட்டியிடுவர். வெட்டப்பட்ட கற்கள் விளையாட்டு பலகையிலிருந்து அகற்றப்படும். பலகையின் இடங்களை அதிகமாக கைப்பற்றி எதிர்தரப்பினரை விளையாட முடியாமல் செய்தாலோ அல்லது யாராலும் தனது எதிர்தரப்பினரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாவிட்டாலோ விளையாட்டு முடிவுக்கு வரும். விளையாடப்படும் சில கற்கள் வெட்டி எடுக்கப்பட்டாலும் அதிக இடங்களை கைப்பற்றியவரே இப்போட்டியில் வெற்றி பெறுவார். இத்தகைய சிறப்புமிக்க சதுரங்க விளையாட்டு சீனாவில் அதிகமாக விளையாடப்படுகிறது.
1 2 3 4
|