
தந்தையின் விருப்பத்தையும் எதிர்பார்ப்பையும் Gu Li நன்றாக புரி்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது—
"தந்தையின் தாக்கத்தினால் Weiqi சதுரங்கம் விளையாட கற்றுக் கொண்டேன். 'சதுரங்கம் விளையாடினால் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்'. முதல் தர வீரராக நான் வளர வேண்டும் என்று எனது தந்தை விரும்பினார். தற்போது Weiqi சதுரங்கம் எனது வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பகுதியாக மாறியுள்ளது" என்றார் அவர்.
Gu Liவின் Weiqi சதுரங்க உலகில், மற்றொரு முக்கியமானவர் இருக்கிறார். அவர் தான் Chong Qing சதுரங்க கழகத்தின் தலைவர் Yang Yi. அவர் பேசுகையில், சிறுவராக இருந்த போது சாதாரண குழந்தைகளைத் தாண்டிய புத்திக்கூர்மையையும் சிறப்பு திறமையையும் Gu Li வெளிப்படுத்தியதாக கூறினார்.
1 2 3 4
|