• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-25 09:49:18    
Weiqi சதுரங்க விளையாட்டு வீரர் Gu Li

cri

9 வயதான போது, Gu Li சிறப்பு பயிற்சி பெற்றார். அதிகமான வாய்ப்புகள் அவருக்கு வழங்கப்பட்டன. அதற்குப் பின், Weiqi சதுரங்க விளையாட்டில் அவரது திறன் பெரிதும் அதிகரித்து வருகிறது. சீன Weiqi சதுரங்கம் முதல் தர லீக் போட்டியின் சாம்பியன், புதிய வீரருக்கான போட்டி சாம்பியன், Li Guang கோப்பைக்கான போட்டியின் சாம்பியன், tengen போட்டியின் சாம்பியன், NEC கோப்பை போட்டியின் சாம்பியன் முதலிய பட்டங்களை அவர் வென்றெடுத்தார். Weiqi சதுரங்கம் விளையாடும் திறனின் அதிகரிப்புடன், அவர் சாம்பியன் பட்டம் பெறுகின்ற எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள், 10வது LG கோப்பைக்கான உலக Weiqi சதுரங்கம் போட்டியில் வெற்றி பெற்ற Gu Li, Weiqi சதுரங்க விளையாட்டின் சிறப்பு வாழ்க்கையில் முதலாவது உலக சாம்பியன் பட்டம் பெற்றார். ஆனால், Gu Li நல்ல நிலைமையில் இருந்த போதே, அவரது தந்தை எதிர்பாராதவாறு மரணமடைந்தார். தந்தை மீதான அதிக பாசத்தால் தந்தையின் இறப்பு பெரிய தாக்கத்தை அவரில் ஏற்படுத்தியது. தாயின் பாசமுள்ள பராமரிப்புடன் அவர் படிப்படியாக தனது மனநிலையை சரிப்படுத்தி, பக்குவம் அடைந்துள்ளார்.

25 வயதான Gu Li இளமையாகவும் உற்சாகத்துடனும் காணப்படுகிறார். Weiqi சதுரங்கம் தவிர, கால்பந்து விளையாடவும் இசை கேட்டு இரசிக்கவும் விரும்புகிறார். "Chong Qingகின் பெயர் அட்டை" என பாராட்டப்படுகின்ற அவர், Chong Qing நகரில் 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம் ஏந்துவதற்கு முதலாவது நபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


1 2 3 4