
 சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் வடபகுதியில், புகழ்பெற்ற கனாஸ் இயற்கைக் காட்சி மண்டலம் அமைந்துள்ளது. உலகில் மிக அழகான ஏரி என்று அழைக்கப்படும் கனாஸ் ஏரி உள்ளிட்ட தனிச்சிறப்பான இயற்கை காட்சிகள் இதில் இடம்பெறுகின்றன.
குளிர் மற்றும் வெப்ப மண்டல மலை பிரதேசத்தில், இது, அமைந்துள்ளதால், கோடைக்காலத்தில், கனாஸில், ஈரப்பதம் சரியாக உள்ளது, காற்று தூய்மையானது. பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும் கோடைக்கால வாழ் இடம், இதுவாகும். ஆனால், ஒவ்வொரு அக்டோபர் பிற்பகுதி முதல், அடுத்த ஆண்டின் மார்ச் திங்கள் இறுதிவரை, பெரும் பனி பெய்ததால், இங்குள்ள பாதைகள் மூடப்பட வேண்டியுள்ளன. இன்று, குளிர்காலத்தில் கனாஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலாவது தொகுதி பயணிகளுடன் இணைந்து கனாஸில் பெய்கின்ற பனியை பற்றி உணர்ந்து கொள்ளலாம். வாருங்கள்!
1 2 3 4
|