

கனாஸ் குளிர்கால நிழற்பட விழாவின் துவக்க நடவடிக்கையில், குதிரை ஓட்ட போட்டி, அம்பு எய்தல், மற்போர் முதலிய உள்ளூர் தனிச்சிறப்புடைய நாட்டுப்புற நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன. பூஜ்யத்துக்குக் கீழ் 30க்கு மேலான டிகிரி வானிலையில், ஒளிப்பதிவாளர்களும் பயணிகளும், விடியோ மற்றும் புகைப்பட கருவிகளின் மூலம் ஒவ்வொரு சிறப்பான நேரத்தையும் பதிவு செய்தனர். ஷாங்காய் மாநகரிலிருந்து வந்த பயணியர் Ju xing zhou, கனாஸில் 6வது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், குளிர்காலத்தில் வருவது, இதுவே முதல் முறையாகும். அவர் கூறியதாவது:
இங்கு சூழல் அருமையாக உள்ளது. ஆதிகால காட்சிகள் மேலும் அதிகமான பயணிகளை ஈர்க்கின்றன. நான் அடிக்கடி வந்து விளையாட விரும்புகின்றேன் என்றார் அவர்.
1 2 3 4
|